2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நரம்பியல் சிகிச்சை முறையை வழங்கும் ஆசிரி சென்ட்ரல்

Gavitha   / 2017 ஜனவரி 31 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரி குழும வைத்தியசாலைகளின் ஓர் அங்கமும், JCI அங்கிகாரம் பெற்ற வைத்தியசாலையுமான ஆசிரி சென்ட்ரல் ஹொஸ்பிட்டல், நோயாளர்களுக்கு ஈடிணையற்ற சிகிச்சைகளை வழங்கி தேசத்தின் சுகாதாரத்துறையைத் தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது.  

இந்த வைத்தியசாலையின் பல்திறன் “இடையீட்டு கதிரியக்கத் தொகுதி” (Interventional Radiology Unit) மூலமாக, அதிநவீன சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன், இலங்கையின் முதலாவது தனியார்த்துறை Biplaner Catheterization ஆய்வுகூடத்தின் ஊடாக குருதிக்கலப் புடைப்பு, பக்கவாதம் மற்றும் ஏனைய நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

Biplane Digital Subtraction Angiography தொகுதியானது, 150 மில்லியன் ரூபாய் முதலீட்டில் ஆசிரி சென்ட்ரல் ஹொஸ்பிட்டல் மூலமாக, 2013ஆம் ஆண்டில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தது. 

சர்வதேச சுகாதார பராமரிப்பு தரங்களுக்கிணையாக, biplane தொழில்நுட்ப கதிரியக்க நிபுணர்கள் மூளை தமனிகளை மிகப்பெரிய திரையில் கண்டு, பாதுகாப்பான இடையீட்டுக்கான 100% வீதம் துல்லியம் மற்றும் விரைவான சிகிச்சைகள் வழங்கி வருகின்றனர். 

இந்தப் பிரிவானது பயிற்றப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த இரு ஆலோசக இடையீட்டு கதிரியக்க நிபுணர்களான மருத்துவர்.நிஹால் விஜேவர்தன மற்றும் மருத்துவர்.லக்மாலி பரணஹேவ மூலம் மேலாண்மை செய்யப்படுகிறது. “எமது குழுவானது பக்கவாத வைத்தியர் டாக்டர்.துருல் அட்டிகல மற்றும் நரம்பியல் ஆலோசக அறுவை சிகிச்சையாளர் டாக்டர்.சுனில் பெரேரா உள்ளடங்கலாக செயற்றிறன் வாய்ந்த இடையீட்டு நிபுணர்களைக் கொண்டுள்ளது. மேலும் இத்தொகுதியில் 24/7 அடிப்படையில் பயிற்றப்பட்ட கதிர்வீச்சுபட நிபுணர்கள் மற்றும் தாதிமார்கள் பணியாற்றி வருகின்றனர்” என டாக்டர் லக்மாலி பரணஹேவ தெரிவித்தார்.  

நரம்பியல் இடையீட்டு என்பது இன்று மூளை நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் குறைந்த அளவில் துளையிடும் அணுகுமுறையாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஊடாக நோயாளி விரைவாக குணமடைவதுடன், நோயாளியின் மீது குறைந்தளவான பக்க விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும், கால்களின் கவட்டில் துளையிடுவதால் குறுகிய காலத்திலேயே நோயாளர்கள் தங்கள் தினசரி வேலைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X