Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சார உற்பத்திக்கு புதுப்பிக்கத்தக்க வலு வளங்களை உருவாக்குவதன் மூலமாக வலுவில் தன்னிறைவடைந்த நாடாக இலங்கையைத் தரமுயர்த்துவது எனும் இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்புகளுக்கு நாடு முழுவதிலுமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நவலோக பவர் சொலூஷன்ஸ் தலைவர் ஜயந்த தர்மதாச கருத்துத்தெரிவிக்கையில், “இன்றைய வலுத்தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மிகச்சிறந்த மற்றும் புத்தாக்கமான வலுத்தீர்வுகளை வழங்கும் முன்னணி தனியார் நிறுவனமாக நவலோக பவர் திகழ்கிறது. தரம் வாய்ந்த உள்நாட்டு சூரிய சக்தியை மேம்படுத்தும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
“சூர்ய பல சங்கிராமய” அல்லது சூரிய சக்திக்கான போராட்டம் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக வீட்டு உரிமையாளர்களின் கூரைகளில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின்சக்தியை தேசிய மின்வழங்கல் கட்டமைப்புக்கு இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களின் மாதாந்த மின்சார பாவனையைப் பொறுத்து, வாடிக்கையாளர்களுக்கு நேவ Net Metering, Net Accounting அல்லது Net Plus ஆகியவற்றை பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது.
சிறந்த பிரதியீட்டு மின்வலு முறையாக சூரிய மின்சக்தி அமைந்திருந்த போதிலும், இந்நாட்டில் அது முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என நவலோக டிரேடிங் நிறுவனத்தின் ஒரு பிரிவான நவலோக பவர் சொலூஷன்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. நம்பிக்கை வாய்ந்த சேவை வழங்குநர் எனும் வகையில், நிறுவனத்தின் மின் தீர்வுகள், நாட்டில் மின்சார வலுவை ஊக்குவிப்பதுக்கு சிறந்தனவாக அமைந்துள்ளன.
உயர் தரம் வாய்ந்த படல்கள் மற்றும் இன்வேர்டர்களைப் பயன்படுத்துகின்றமை தொடர்பில் நிறுவனம் பெருமை கொள்கிறது. single-phase Zever Solar இன்வேர்டர்களை அவுஸ்திரேலியாவின் Zever இலிருந்து இறக்குமதி செய்யும் ஏக அங்கிகாரத்தை நவலோக பவர் கொண்டுள்ளது. இவை நிறுவிக்கொள்ள இலகுவானவை. சந்தையில் காணப்படும் செலவீனம் குறைந்த இன்வேர்டர் வகையாக கருதப்படும் Zeversolar, வீட்டுப்பாவனைச் சாதனங்களுக்கு மிகவும் பொருத்தமான தெரிவாக அமைந்துள்ளதுடன், அதிகளவு வலு விளைவையும் வழங்குகிறது.
20 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
4 hours ago