Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 மே 29 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரிமையாளர் வரையறைகள், உயர் மூலதன இருப்பை உறுதி செய்தல், கடன் இழப்பு ஒதுக்கங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அறிக்கையிடல் நியமங்கள் தொடர்பில் நாட்டின் அங்கிகாரம் பெற்ற நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது கடுமையான ஒழுங்குபடுத்தல் அழுத்தங்களைப் பிரயோகிக்க இலங்கை மத்திய வங்கியின் நாணய அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் உரிமையாண்மை எல்லைப் பெறுமதி ஐந்து ஆண்டுகளுக்குள் 25 சதவீதமாக அமைந்திருப்பது பற்றிய பிரேரணையை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது. இது தொடர்பாகப் பங்காளர்களின் அவதானிப்புகளை வழங்குமாறும் கோரியிருந்தது.
இந்த எல்லைப் பெறுமதியை விசேட சந்தர்ப்பங்களில் 30 சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும். இது தொடர்பில் தமது கருத்துகளை ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பங்காளர்கள் சமர்ப்பிக்க முடியும். தற்போது அழுத்தமான உரிமையாண்மை எல்லைகள் வங்கியியல் துறையில் பின்பற்றப்படுகின்றது. ஆகக்கூடியது 10 சதவீதம் வரை ஒரு நிறுவனம்/தனிநபர் கொண்டிருக்கலாம் என்பதுடன், இதை விடச் சற்று அதிகரித்த தொகையை அனுமதியைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.
இதைப் பின்பற்றாமை காரணமாக, வியாபார செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுகின்றமை, அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படல் போன்ற கடுமையான விதிமுறைகள் அறிமுகம் செய்யப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில், 30 நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் 50 சதவீதமான பங்குகளை பிரதான உரிமையாளர் கொண்டிருப்பதாகவும், எட்டு நிறுவனங்களில் உரிமையாண்மை என்பது பிரதான உரிமையாளருக்கும் தொடர்புடையவர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரு பங்காளர்கள் இரு நிறுவனங்களை கட்டுப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago