S.Sekar / 2021 ஏப்ரல் 02 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் டயர் உற்பத்தியாளரான AMW மெனுஃபக்ஷரிங், கடந்த ஆண்டில் நிலவிய சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து, 2021 ஆம் ஆண்டில் நேர்த்தியான பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவலுடனான காலப்பகுதியில் நிறுவனம் சிறந்த வகையில் செயலாற்றியிருந்ததுடன், சந்தையில் எழுந்த சவால்களுக்கு முகங்கொடுத்து, 2020 ஆம் ஆண்டில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. நிறுவனத்தின் உள்ளக செயற்பாடுகளை முழுமையாக மீளமைத்து, துரிதமாக செயலாற்றியிருந்ததனூடாக இந்தப் பெறுபேறுகளை எய்தக்கூடியதாக இருந்தது.

கொவிட்-19 தொற்றுடன் எழுந்த சவால்கள் நிறைந்த சூழலுக்கு முகங்கொடுக்கும் வகையில் AMW மெனுஃபக்ஷரிங், இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றி, நவீன கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாகக் கட்டமைப்பொன்றை நிறுவியிருந்தது. இவ்வாறான பாதுகாப்பு கட்டமைப்பு சான்றைப் பெற்ற இலங்கையின் 2ஆவது நிறுவனமாக அமைந்துள்ளது.
இதனூடாக தடங்கல்களின்றி, ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து, AMW மெனுஃபக்ஷரிங் நிறுவனத்தினால் தனது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க முடிந்தது. Lean முகாமைத்துவக் கட்டமைப்பின் அறிமுகத்தினூடாக கழிவுகள் குறைக்கப்பட்டதுடன், வாடிக்கையாளர் பெறுமதி உருவாக்கத்தை மேம்படுத்தியிருந்தது. மேலும், நவீன தன்னியக்கமயமான செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் அறிமுகத்தினூடாக, உடனடி தீர்மானமெடுத்தல்களை எளிமைப்படுத்தியிருந்ததுடன், செயற்பாட்டு வினைத்திறனை பெருமளவு அதிகரிக்கச் செய்திருந்தது.
AMW உற்பத்தி செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் லசந்த விஜேவீர கருத்துத் தெரிவிக்கையில், “ஈடுபாட்டுடனான ஊழியர்களின் பங்களிப்புடன், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நிறுவமொன்றைக் கொண்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு எமது தந்திரோபாய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இதனூடாக “Going the Extra Mile” எனும் எமது உறுதி மொழியை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதாக இருக்கும். தொடர்ந்தும் எமது முதலீடுகளை, மக்கள், செயன்முறைகள் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் மேற்கொண்டு, சிறந்த பெறுபேறுகளை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “நாம் முன்னேறும் போது, சந்தையில் காணப்படும் வாய்ப்புகள் பற்றி அதிகளவு கவனம் செலுத்துவதுடன், குறிப்பாக டயர்கள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம். நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி, சிறந்த வியாபார வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு வலிமை சேர்ப்போம்.” என்றார்.
அண்மையில் எய்திய சாதனைகளுடன், தனது கொள்ளளவையும் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. ‘Solid Tires’ பிரிவில் 70% மேலதிக திறனை உள்வாங்க முடிந்துள்ளது. தனது உற்பத்தி வரிசையில் நவீன Banbury Mixer ஐ இணைத்துள்ளதனூடாக, Custom Compound Mixing பிரிவில் சந்தை முன்னோடி எனும் தனது ஸ்தானத்தையும் நிறுவனம் தக்க வைத்துள்ளது.
10 minute ago
13 minute ago
23 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
23 minute ago
25 minute ago