S.Sekar / 2022 செப்டெம்பர் 26 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெஸ்லே லங்கா விநியோக மையத்தின் பாதுகாப்புடனான செயல்பாடுகள், 4,000 நாட்கள் என்ற சாதனை இலக்கினை எட்டியுள்ளதுடன், நிறுவனம் தனது பணியாளர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பின் மீது கொண்டுள்ள வலுவான அர்ப்பணிப்பை இது மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. குருநாகலில் அமைந்துள்ள மற்றும் அதன் விநியோக நிர்வாக ஏற்பாட்டுக் கூட்டாளரான EFL 3PL உடன் இணைந்து செயற்படும் நெஸ்லே லங்கா விநியோக மையத்தின் ஊழியர்கள் 150 க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட ஒரு அணியாக உள்ளனர். மிகவும் நேசிக்கப்படும் நெஸ்லே தயாரிப்புகளை திறன்மிக்க வகையில் களஞ்சியப்படுத்தி, அவற்றின் போக்குவரத்தை உறுதிசெய்து, நாடளாவிய ரீதியில் உள்ள நுகர்வோர்களுக்கு அவை கிடைக்கும் வகையில் இவ்வணி சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை இலக்கினை நினைவுகூரும் நிகழ்வு ஒன்று 2022 ஆகஸ்ட் 30 அன்று நெஸ்லே லங்காவின் விநியோக மையத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, நெஸ்லே லங்கா முகாமைத்துவப் பணிப்பாளர் ஜேசன் அவன்சென்யா, நெஸ்லே லங்காவின் வழங்கல் சங்கிலிக்கான துணைத் தலைமை அதிகாரியான பஞ்சாட்சரம் சத்தியேந்திரா, EFL 3PL பிரதம நிறைவேற்று அதிகாரி சம்மி அக்பர், நெஸ்லே லங்கா மற்றும் EFL 3PL அணிகள் ஒன்றிணைந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். கடுமையான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடித்தவாறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் உரையாற்றிய நெஸ்லே லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜேசன் அவன்சென்யா கருத்து வெளியிடுகையில், 'எமது விநியோக மையத்தின் பாதுகாப்பான செயல்பாடுகள் 4,000 நாட்களை எட்டிய சாதனை இலக்கினைக் கொண்டாடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எமது வணிகத்தின் இதயநாடியாக எமது பணியாளர்கள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனவே, நெஸ்லே நிறுவனத்தில் பாதுகாப்பு என்பது எப்போதும் முன்னுரிமையாக உள்ளது. பணியிடத்தில் தமது சொந்த பாதுகாப்பை உறுதிசெய்து, எமது கடுமையான பாதுகாப்புத் தராதரங்களை நிலைநாட்டுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக ஒவ்வொரு பணியாளரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். இன்று நாம் எதிர்கொள்ளும் பல நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் எமது வணிகச் செயல்பாடுகளின் தொடர்ச்சிக்காக விநியோக மைய அணியினர் ஆற்றி வருகின்ற சிறந்த பணிகளையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்,' என்று குறிப்பிட்டார்.
மிக உயர்ந்த பாதுகாப்பிற்கான தமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், நெஸ்லே லங்கா மற்றும் EFL 3PL இன் சிரேஷ்ட நிர்வாகம் ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அதாவது பணியிடத்தில் ஒருவரின் சொந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை நினைவூட்டும் வகையில் அவர்கள் அங்கு கலந்துகொண்டிருந்தவர்கள் முன்னிலையில் இந்த உறுதிமொழியை முன்வைத்தனர். மேலும், ஊழியர்களின் பிள்ளைகள், பாதுகாப்பு தொடர்பில் தாம் கொண்டுள்ள விளக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சித்திரப் போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. பொறுப்புணர்வுடனான நடத்தையை ஊக்குவிப்பதற்காகவும், பாதுகாப்புக் கலாச்சாரத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவும் உயர்ந்த பாதுகாப்புத் தரத்தை வெளிப்படுத்திய ஊழியர்களை அங்கீகரிப்பதற்காக விருது வழங்கும் வைபவமும் நடத்தப்பட்டது.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025