2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நெஸ்லே லங்கா (UHT) ஆலை அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெஸ்லே லங்கா நிறுவனம், குருநாகலில் அமைந்துள்ள தனது நவீன தொழிற்சாலையில், அதிக வெப்பநிலையில் பாலைப் பதனிடும் ஆலை ஒன்றை புதிதாக ஆரம்பித்து வைத்துள்ளதன் மூலமாக, நிறுவனத்தின் வரலாற்றில் மற்றுமொரு பாரிய சாதனை இலக்கினை எட்டியுள்ளது. இந்நிறுவனம் நாட்டில் மேற்கொண்டுவருகின்ற முதலீடுகளின் தொடர்ச்சியாக, உள்நாட்டு பாலுற்பத்தித் தொழிற்றுறையை அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் அது 500 மில்லியன் ரூபாயை முதலீடு செய்துள்ளது.   

பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்த இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் சபைத் தலைவரான உபுல் ஜெயசூரிய ஆகியோரால் அதிக வெப்பநிலையில் பாலைப் பதனிடும் இந்த ஆலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.   

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கூறுகையில், “இன்று எமது நாடு வெளிநாட்டுக் கடன்கள் காரணமாகப் பாரியதொரு சவாலுக்கு முகங்கொடுத்துள்ளது. எனினும், நெஸ்லே நிறுவனம் தனது வலிமையான வர்த்தகநாமங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலமாக இலங்கை தனது அந்நிய செலாவணிக் கையிருப்பைப் பேணிப் பாதுகாத்து, அதனைச் சேமிப்பதற்கு பாரியளவில் பங்களிப்பை ஆற்றிவருகின்றது.

உள்நாட்டிலுள்ள 20,000 பாற்பண்ணையாளர்களின் வாழ்வை வலுவூட்டுவதற்கு உதவி வருகின்றது தனது பல்வேறு முன்னெடுப்புக்களினூடாக உள்நாட்டுப் பொருளாதாரத்துடன் தன்னை முற்றுமுழுதாக ஒன்றிணைத்துள்ள ஓர் நிறுவனத்துக்கு நெஸ்லே மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்து வருகின்றது. இந்த விஸ்தரிப்பு நடவடிக்கை தொடர்பில் நிறுவனத்துக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், இதன் மூலமாக அவர்கள் தோற்றுவித்துள்ள தொழில்வாய்ப்புக்கள் மற்றும் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு மீதான நீண்ட கால அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு மகத்தான ஒரு சான்றாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.   

“நாம் தற்போது இலங்கையில் முதலீட்டு முன்னெடுப்பு ஒன்றுக்கு தயாராகி வருகின்றோம். நெஸ்லே நிறுவனம், தனது பாலுற்பத்தி மேம்பாட்டு முன்னெடுப்புக்களின் மூலமாக 30 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையின் எதிர்காலத்தின் மீது முதலீடு செய்யும் தனது பயணத்தை ஆரம்பித்து, நாட்டின் அபிவிருத்திக்கு கணிசமான அளவில் பங்களிப்பாற்றி வருவதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்” என்றார் ர்அவர்கள் புதிதாக மேற்கொண்டுள்ள முதலீடு, நாட்டில் இறக்குமதிக்கான பிரதியீடுகளையும், ஏற்றுமதிகளையும் மேலும் அதிகரிக்கும். இதனை நேரில் காண்பதற்கு எனக்கு வாய்ப்பளித்தமைக்காக நெஸ்லே நிறுவனத்துக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X