Editorial / 2020 ஜூன் 30 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் புதிய தவிசாளராக, துமித் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை முதலாம் திகதி முதல் அமலுக்குவரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாண்டுகளாக தவிசாளராகச் செயலாற்றிய ரே அபேவர்தன, தமது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ளதைத் தொடர்ந்து, இந்தப் புதிய நியமனத்தை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு முதல், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கும் துமித், முன்னணி முதலீட்டு வங்கியியல் நிறுவனமான ஆசியா செக்கியுரிட்டீஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் தவிசாளராகவும் பணியாற்றுகின்றார். யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி ஆகியவற்றின் சுயாதீன பணிப்பாளராகவும், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பொருளாதார கொள்கை நிறைவேற்றுக் கழகத்தின் அங்கத்தவராகவும் செயலாற்றுகின்றார்.
இலங்கையின் மூலதன சந்தையில் 25 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள துமித், நியு யோர்க், ஹொங் கொங் நாடுகளில் ஜேபி மோகன் சேஸ், கிரெடிட் சுசி போன்ற சர்வதேச நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டுள்ளார். அமெரிக்காவின் மிடில்பரி கல்லூரியில் பொருளாதாரம், பௌதீகவியல் ஆகியவற்றில் இளமாணி பட்டத்தையும் ஹாவார்ட் பிஸ்னஸ் ஸ்கூலில் முதுமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
37 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago