2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

பணிபுரிவோருக்கும் வக்சீன்

S.Sekar   / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதம் முற்பகுதியிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 30 – 60 வயதுக்குட்பட்ட பணியாற்றுவோருக்கும் கொவிட்-19 வக்சீன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே குறிப்பிட்டார்.

பல்வேறு தொழிற்துறைகள் அரசாங்கத்திடமிருந்து வக்சீனைக் கோரியுள்ளன. இந்நிலையில், தனியார் சுகாதாரத் துறையைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் முன்னிலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வக்சீன் வழங்குவதற்கான அனுமதியை இலங்கை வழங்கும் எனவும் குறிப்பிட்டார்.

வசதியினூடாக மார்ச் மாத முற்பகுதியில் அடுத்த தொகுதி வக்சீன்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதிக்கப்பட்ட எட்டு மில்லியன் வக்சீன்கள் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக கடந்த வாரம் இராஜாங்க அமைச்சர் அறிவித்திருந்தார். மேலும் 18 மில்லியன் வக்சீன்களை இலவசமாக பகிரக்கூடிய வகையில் கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X