2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

பஸ்கள் நூலகங்களாகின

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT, மொபிடெல் மனுசத் தெரனவுடன் கூட்டிணைந்து பாவனையிலிருந்து ஒதுக்கப்பட தேசிய போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பஸ்களை முற்றுமுழுதாக நூலகங்களாக மாற்றும் திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இலங்கை தேசிய நூலகம், இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.  

தேசிய தொலைத்தொடர்புச் சேவை வழங்குனர் என்ற வகையில் இலங்கை மாணவர்களின் கல்வியறிவு, கற்றல் பழக்கங்களை மேம்படுத்துவதில் பாடசாலை நூலகங்கள் கொண்டுள்ள முக்கியத்துவத்தை SLT,  மொபிடெல் அறிந்துள்ளது. அந்த வகையில் ந-கற்றல், m-கற்றல் போன்ற தளங்கள் மூலம் வாசிப்புக்கான தரமான அணுகலை வழங்குவதன் மூலம் கல்வி அமைப்பு முறையை ஆதரிப்பதற்கு SLT குழு உறுதிபூண்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள், பட்டதாரிகள், மேலதிக அறிவினைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் வலுவூட்டப்படுகின்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள 25 நூலகங்கள் கற்றல் மையங்களாக செயற்படுவதுடன் அணுகக்கூடிய கல்வி வளங்களைக் கொண்டு மாணவர்களுக்கு சம வாய்ப்புக்களை வழங்குவதுடன் வாசிப்புப் பழக்கத்தையும் உருவாக்குகிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X