2025 மே 16, வெள்ளிக்கிழமை

பாவித்த வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை அதிகரிப்பு

S.Sekar   / 2021 மார்ச் 01 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன இறக்குமதிக்கு தொடர்ந்து கட்டுப்பாடு நிலவும் நிலையில், இந்தத் துறையுடன் சம்பந்தப்பட்ட வியாபாரங்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு பாவித்த வாகனங்கள் மீது வழங்கப்படும் கடன் தொகையை வாகனப் பெறுமதியின் 80 சதவீதம் வரை வழங்குவதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளது.

இலங்கையில் பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கு மேல் பாவனையிலுள்ள வாகனங்களைக் கொள்வனவு செய்வோருக்கு இவ்வாறு 80 சதவீதம் வரை கடன் தொகையை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2020 ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் ஒரு வருடத்துக்கு மேல் பாவனையிலுள்ள வாகனங்களுக்கு அதன் முழுப் பெறுமதியில் 70 சதவீதம் வரையிலும், ஒரு வருடத்துக்கு குறைந்த காலப்பகுதியில் பாவனையிலுள்ள வாகனங்களுக்கு முழுப் பெறுமதியில் 90 சதவீதம் வரையிலும் கடன் தொகையாக வழங்குவதற்கான ஒழுங்கு விதியை இலங்கை மத்திய வங்கி அமல்ப்படுத்தியிருந்தது.

நாணய அச்சிடல் காரணமாக அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவடைந்தமை காரணமாக, 2020 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டது. இந்தத் தடை தற்போதும் அமலிலுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு சந்தையில் பாவித்த வாகனங்களின் விலைகள் 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.

நாணயம் அச்சிடல் நிறுத்தப்பட்டு, நாணயச் சபை மீள நிறுவப்பட்டு அதனூடாக நாணயமாற்று வீதத்தை சீராக்கி சுதந்திர வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஆய்வாளர்களும் பொருளாதார வல்லுநர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .