2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பிரிட்டிஷ் கவுன்ஸில் நூலகம் மீளத்திறப்பு

Editorial   / 2018 ஜூன் 07 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்ஸில் நூலகம், புதிதாக மெருகேற்றம் செய்யப்பட்டு அண்மையில் மீளத்திறந்து வைக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள அனைவரின் மனங்கவர்ந்த கலை அம்சங்களுக்கான பகுதியாகத் திகழ்வதை இதனூடாக மேலும் உறுதி செய்துள்ளது. ‘it all happens here’ எனும் புதிய தொனிப்பொருளுடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த நூலகம், அனைவரின் அறிவுப்பசியையும் நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த நூலகத்தை உத்தியோக பூர்வமாக மீளத்திறந்து வைக்கும் நிகழ்வில், ஊடகவியலாளர்கள், விசேட விருந்தினர்கள் மற்றும் நீண்ட கால அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இவர்களுக்குச் சிறந்த மாலை வேளை இசை விருந்து வழங்கப்பட்டிருந்தது.  

பிரிட்டிஷ் கவுன்ஸில் மீளத்திறந்து வைக்கப்பட்டமை தொடர்பில், அதன் இலங்கைக்கான பணிப்பாளர் ஜில் கல்டிகொட் கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய உலகில் நூலகமொன்று எவ்வாறு தோற்றமளிக்கும் என்ற கேள்விக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கி, எமது நூலகத்தை மீள வடிவமைத்திருக்கின்றோம். 

 பாரம்பரிய நூலகங்களைப் போன்று சாந்தும் கல்லும் கொண்டமைவதற்கு அப்பாற்பட்டதாக இது அமைந்துள்ளது. பெருமளவானோருக்கு புகழ்பெற்ற நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான பகுதியாக பிரிட்டிஷ் கவுன்ஸில் நூலகம் அமைந்துள்ளது. இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை நாம் கவனத்தில் கொண்டு, இங்கு வருகை தருவோரின் வசதி கருதி, அதிகளவானோரை உள்வாங்குவது குறித்து  எப்போதும் கவனம் செலுத்தியிருந்தோம். இதன் காரணமாக, எமது புதிய தொனிப்பொருளான ‘it all happens here’ என்பதை, நாம் மீள அறிமுகம் செய்யத் தீர்மானித்தோம்” என“் குறிப்பிட்டார்.  

ஞாயிற்றுக்கிழமை, நூலகம் பொது மக்களின் பாவனைக்காக புதிய தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், சகல வயதினரின் பாவனைக்காக தினசரி திறந்திருக்கும். வெவ்வேறு வயதைச் சேர்ந்தவர்கள், திறந்த ஒலிவாங்கி அமர்வுகள் மற்றும் திரை பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றை கொண்டிருந்ததுடன், இளைஞர்களுக்குத் திரைக் காட்சிகள் மற்றும் கதை சொல்லும் நிகழ்வுகள் போன்றன முன்னெடுக்கப்பட்டிருந்தன.  

பாரம்பரிய நூலகம் எனும் கொள்கையிலிருந்து அப்பால் சென்று, வாத்தியக் கருவிகள் பகுதி மற்றும் நூலக கோப்பி அருந்தும் பகுதி போன்றன புதிய அம்சங்களாக பிரிட்டிஷ் கவுன்ஸில் நூலகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. இதனூடாக சிறந்த கல்வி பயிலும் பகுதி மற்றும் கலாசார மையமாக அமைந்துள்ளது.  

கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகியன இடங்களில் பிரிட்டிஷ் கவுன்ஸில் தனது நூலகங்களைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் மாத்திரம் 25,000க்கும் அதிகமான அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் கவுன்ஸிலின் சர்வதேச வலையமைப்பில் அதிகளவான அங்கத்தவர்களைக் கொண்ட நூலக வலையமைப்பாக இது திகழ்கிறது. 500,000 புத்தகங்கள், சஞ்சிகைகள், DVD கள் மற்றும் வளங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு மேலதிகமாக, விசேட நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளுக்கு பிரவேசிப்பது, சரசவி, விஜித யாபா மற்றும் செப்டர்ஸ் புத்தக சாலைகளில் விலைக்கழிவுகளை பெற்றுக் கொள்ளக்கூடிய உத்தரவாதத்துடன் கூடிய அங்கத்துவ அட்டையும் வழங்கப்படும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .