Editorial / 2019 ஜனவரி 17 , பி.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017-18 காலப்பகுதிக்கான பிஸ்னஸ் டுடே சிறந்த 30 விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, செலான் வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வினைத்திறனுடன் செலான் வங்கி தனது நிலையை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9 ஸ்தானங்கள் முன்னேற்றியிருந்தது. இந்த ஆண்டு வழங்கப்பட்ட தரப்படுத்தலில் 11ஆம் நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்தக் கௌரவிப்பு தொடர்பில் செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் முன்னணி நிறுவனங்களுடன் உயர்ந்த ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கிறோம். சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில், புத்தாக்கமான வகையில் எமது பங்காளர்களுக்கு பெறுமதியை சேர்க்கும் நடவடிக்கைகளினூடாக நிலைபேறான வகையில் வளர்ச்சியை பதிவு செய்ய உதவியிருந்ததுடன், எமது வினைத்திறன் மற்றும் சேவைகளை மேம்படுத்தவும் முடிந்தது. எமது பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், பங்காளர்கள் மற்றும் அர்ப்பணிப்பான ஊழியர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், முக்கியமாக இந்த நிலையை எய்துவதற்கு எமக்கு பெரிதும் பக்கபலமாக அமைந்திருந்த வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
வளர்ந்து வரும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பங்களிப்பு வழங்கும் நிறுவனங்களின் நிதிசார் பெறுபேறுகளை கௌரவிக்கும் வகையில் இந்த தரப்படுத்தல் கௌரவிப்பு அமைந்துள்ளது.
8 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Mar 2026