Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்துக்கு, சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் 2018 இல், சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்ததுது.
நிலைபேறாண்மைக்காக தம்மை அர்ப்பணித்து செயலாற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் வருடாந்தம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.
15ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம், சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று, 2018 இன் சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதை பெற்றுக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .