Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 23 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பள்ஸ் லீசிங் தங்காலை கிளையின் மூலமாக, முன்பள்ளி சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பயிற்சிப்பட்டறை ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு தங்காலை நகர மண்டபத்தில் இடம்பெற்றதுடன், இதில் முன்பள்ளிச் சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது தொடர்பில் அமைந்திருந்த இந்த நிகழ்ச்சியில், சிறுவர்கள் நிகழ்ச்சி பணிப்பாளரும், எழுத்தாளருமான உபுல் வீரசிங்க (உபுல் மாமா) கலந்து கொண்டு, சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். அவர் வெளிப்படுத்தியிருந்த நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகளைச் சிறுவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.
பீப்பள்ஸ் லீசிங் தங்காலை கிளையின் முகாமையாளர் இசுரு சந்தருவன் டயஸ் இந்நிகழ்வில் உரையாற்றும் போது, “முன்பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது என்பது, தேசிய மட்டத்தில் பொறுப்பு வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. ஆரம்பக் கட்டத்தில் இவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது என்பது, எமது எதிர்காலச் சந்ததியை வளமானதாக மாற்றிக் கொள்ள உதவியாக அமையும். தங்காலை மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் தங்காலை கிளை ஊழியர்கள் ஆகியோரும் இந்தச் செயற்பாட்டுக்கு பங்களிப்பு வழங்க முன்வந்திருந்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago