S.Sekar / 2021 பெப்ரவரி 03 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் புகையிரத போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், 100 பயணிகள் புகைவண்டி பெட்களை உற்பத்தி செய்வதற்கு தனியார் துறையின் முதலீட்டை நாடுவதற்கு போக்குவரத்து அமைச்சுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இலங்கையில் தற்போதைய பயணிகள் புகையிரத பெட்டிகளின் தேவை 700 ஆக அமைந்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் 800 அலகுகளாக அதிகரிக்கும் என பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சரும் மற்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளரான கலாநிதி. ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார். பொதுப் போக்குவரத்து சேவையின் திறனை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதுடன், புகையிரத போக்குவரத்து இதில் முக்கிய அங்கமாக அமைந்திருப்பதாகவும் கூறினார்.
தற்போது காணப்படும் புகையிரத பயணிகள் பெட்டிகளில் சுமார் 30 சதவீதமானவை 30 வருடங்கள் பழைமையானவையாக காணப்படுவதுடன், 60 சதவீதமானவை 25 முதல் 30 வருடங்கள் பழைமை வாய்ந்தனவாக அமைந்துள்ளன. 10 சதவீதமானவை மாத்திரமே 12 அல்லது அதற்கு குறைந்த வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவையாக அமைந்துள்ளன. உள்நாட்டு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் சுமார் 140 பெட்டிகள் புனரமைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து 160 பயணிகள் புகையிரதப் பெட்டிகள் கொள்வனவு செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மேலதிக பயணிகள் பெட்டிகளை உள்வாங்குவதற்கான தேவையை கவனத்தில் கொண்டு, தனியார் துறையையும் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார். முறையான அரசாங்க கொள்முதல் விதிமுறைகளின் பிரகாரம் 100 பெட்டிகள் உள்நாட்டில் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.
2 minute ago
10 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
10 minute ago
15 minute ago
1 hours ago