Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 மே 27 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை அதிகளவு இடவசதி படைத்த புதிய முகவரிக்கு மெருகேற்றம் செய்து இடம்மாற்றியுள்ளது.
இல. 171- A, இரத்தினபுரி வீதி, ஹொரண எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தக் கிளையை, பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் திறந்து வைத்தார்.
“இலங்கையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக ஹொரண திகழ்கிறது. பெருமளவு ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுடன், மக்களின் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கும் உதவுகின்றது. எனவே, லீசிங் மற்றும் நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தக்கு விஜயம் செய்வோரின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த புதிய அதிகரித்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை, அதிகளவு வசதிகள் படைத்த புதிய பகுதிக்கு இடம்மாற்றியுள்ளது” என்றார்.
சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜீவ பண்டாரநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “வியாபார நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதன் காரணமாக ஹொரண வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பிரதேசமாகும். ஹொரண பிரதேசத்தை அண்மித்து வாழும் மக்கள் தமது நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பீப்பள்ஸ் லீசிங் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க விடயமாகும். எனவே, ஹொரண பிரதேசத்தில் அதிகளவு வசதிகள் படைத்த கிளை ஒன்று காணப்பட வேண்டியதற்கான தேவையை நாம் இனங்கண்டிருந்தோம். எனவே, நாம் எமது பீப்பள்ஸ் லீசிங் ஹொரண கிளையை சிக்கல்களில்லாத, சௌகரியமான நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளோம். தற்போது பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் எமது புதிய கிளையிலிருந்து நிதிச் சேவைகளை வசதியான முறையில் பெற்றுக் கொள்ள முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago
2 hours ago