Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2021 ஏப்ரல் 23 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேயிலை மற்றும் இறப்பர் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் இலங்கையின் வணிக பெருந்தோட்ட நிறுவனங்கள், தமது பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொவிட் தடுப்பூசி வழங்குமாறு கோரியுள்ளன. நாட்டின் பிரதான ஏற்றுமதித் துறை இந்த தொழிலாளர்களின் மீது தங்கியிருக்கும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியமானது என இந்த நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.
மொத்தமாக 1.5 மில்லியன் பெருந்தோட்ட சமூகத்தார் காணப்படுவதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றுவதனூடாக எம்மால் கடுமையான சுகாதார தூய்மை மற்றும் சமூக இடைவெளி பொறிமுறைகளை பேண முடிந்துள்ளன என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
பெருமளவானோர் வெளிநாடுகளிலிருந்து மீளத் திரும்பியிருந்த போதிலும், இதுவரையில் பெருந்தோட்ட சமூகத்திலிருந்து ஒரு கொவிட் தொற்றாளரும் இனங்காணப்படாமைக்கு இவ்வாறான கடுமையான சுகாதார விதிமுறைகள் முன்னெடுக்கப்படுகின்றமை உதவியாக அமைந்துள்ளது எனவும் கூறினார்.
தொற்றுப் பரவல் காரணமாக பல்வேறு தடைகள் எழுந்த போதிலும், எமது சகல ஊழியர்களும் குறைந்தளவு தடங்கல்கள் மத்தியில் தொடர்ந்தும் பணியாற்றியிருந்ததுடன், தேசிய பொருளாதாரத்துக்கு அத்தியாவசியமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.
எனவே எமது தொழிலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுக்கின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025