Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கீல்ஸ், வாடிக்கையா ளர்களுக்கு சிறந்த பல்பொருள் அங்காடி அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக, மீள் பாவனை செய்ய முடியாத பிளாஸ்டிக் பாவனையை வெகுவாகக் குறைக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு வாடிக்கையாளர்களின் உறுதியான ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தது. பிளாஸ்டிக் பாவனையற்ற ஒரு நாளைக் கட்டியெழுப்புவதற்குச் சிந்திக்கக்கூடிய வாடிக்கையாளர் சமூகத்தைக் கட்டியெழுப்ப முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆரம்பகட்டமாக அனைத்து கீல்ஸ் பல்பொருள் அங்காடிகளிலும் உள்ள அருந்தகங்களில் குடிபானங்களை கொள்வனவு செய்யும் பொழுது, கடதாசியிலான உறிஞ்சிகளை அறிமுகப்படுத்துவதோடு, மீன், மாமிசங்கள் கொள்வனவு செய்யும்போது உக்கிப் போகக்கூடிய பொதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நீண்ட காலம் பயன்படுத்த முடியுமான புதிய பைகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த உறுதிமொழியானது, அவர்களின் பிளாஸ்டி பாவனையைக் குறைத்து, சாதகமான ஒரு சுற்றுச்சூழல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முதற்படியாக அமைகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் சூரிய தகடுகளைப் பொருத்தி, பேக்கரி உற்பத்திகளுக்கு கடதாசிப் பைகளை அறிமுகப்படுத்தியது மட்டுமன்றி, சொந்தப் பைகளைக் கொண்டுவர, ஊக்குவிக்கும் முயற்சிகள், மீள் பாவனைப் பைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குதல், நாடு முழுவதிலும் உள்ள 40 கிளைகளில் Plasticcycle நிறுவனத்துடன் இணைந்து மீள்சுழற்சித் தொட்டிகளையும் வைத்திருக்கின்றார்கள்.
கீல்ஸ், வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு செவிமடுத்து, ஒன்றாக இணைந்து நாட்டின் தரத்தை மேம்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
40 minute ago
42 minute ago
1 hours ago