Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மற்றும் கண்டியில் அமைந்துள்ள தனது நிலையங்களை மறுசீரமைப்புச் செய்து மீள திறந்து வைத்துள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சில் அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கைக்கான பணிப்பாளர் கீத் டேவிஸ் இந்நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததுடன், பிரிட்டிஷ் கவுன்சில் தலைமை அதிகாரி கிறிஸ்டோபர் ரொட்ரிகூஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வுகளில் விசேட அதிதியாக பிரிட்டிஷ் கவுன்சில் காப்பாளர்களில் ஒருவரான ரொஹான் குணதிலக பங்குபற்றியிருந்தார்.
இந்நிகழ்வுகளின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரிட்டிஷ் கவுன்சில் தலைமை அதிகாரி கிறிஸ்டோபர் ரொட்ரிகூஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இருபத்தோராம் நூற்றாண்டில் பிரித்தானிய தேசத்தின் இன்றியமையாத சொத்தாக திகழ்வதே எமது நோக்காகும். உலகளாவிய ரீதியில் காணப்படும் வௌ;வேறு நாடுகளின் பங்களிப்புடன் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாம் 110க்கும் அதிகமான நாடுகளில் தொடர்புகளை ஏற்படுத்தல், கல்வி வழங்குதல், கலை, கலாசாரம், சிவில் சமூகம் மற்றும் தொழில் போன்றவையின் மூலம் தேசத்துக்கும், பிரித்தானியாவுக்கும் முக்கியமான விடயங்கள் குறித்து ஈடுபாட்டை பேணி வருகிறோம். இலங்கையில் எம் அர்ப்பணிப்புக்கு ஆதாரமாக இக்கட்டிடங்கள் அமைந்துள்ளன” என்றார்.
கலை, கல்வி மற்றும் சமூகம் ஆகியவற்றில் நிபுணத்துவத்தைப் பின்பற்றுவதுக்கு மேலதிகமாக, ஆங்கில அறிவில் மேன்மையை பின்பற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தி வரும் பிரிட்டிஷ் கவுன்சில், இந்த துறைகளில் முன்னணி வளமூட்டும் நிறுவனமாக திகழ்கிறது. நீண்ட கால அர்ப்பணிப்பையும், குறிப்பிடத்தக்களவு முதலீடுகளையும் இது தொடர்பான நிகழ்ச்சிகளில் பேணி வருகிறது.
இந்நிகழ்ச்சிகள் கட்டுக்கோப்பானவையாகவும், பன்முகப்படுத்தப்பட்டவையாகவும் அமைந்துள்ளதுடன், நாட்டின் புத்தாக்கமான நிபுணர்கள் சமூகத்தை உள்ளக வதிவிடங்கள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் ஊடாக கொண்டாடி வருகிறது. கல்வியைப் பொறுத்தமட்டில், வகுப்பறைகளை இணைக்கும் நிகழ்ச்சிகள் ஊடாக இலங்கை மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த 300க்கும் அதிகமான வகுப்பறைகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதனூடாக 250க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தமது தலைமைத்துவ பண்புகளை விருத்தி செய்து கொள்வதுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் 150க்கும் அதிகமான தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இம் மாதத்தின் முற்பகுதியில், வேர்ள்ட் பிரான்டிங் ஃபோரம் என்பதில் ஆங்கில மொழியில் ஆண்டின் சிறந்த கல்வி வர்த்தக நாமமாக பிரிட்டிஷ் கவுன்சில் இந்தத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
திறப்பு நிகழ்வில் பிரிட்டிஷ் கவுன்சிலின் நாட்டுக்கான பணிப்பாளர் கீத் டேவிஸ் கருத்துத் தெரிவிக்கையில், வளாக செயற்றிட்டம் பூர்த்தியடைந்துள்ளமையானது, முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாகும், பிரிட்டிஷ் கவுன்சிலைச் சேர்ந்த நாம் மற்றும் எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்கள் ஆகியோர் கொண்டாடுவதுக்கு பெருமளவான அம்சங்களை கொண்டுள்ளது.
இருந்த போதிலும், இலங்கையில் நாம் கொண்டுள்ள செயற்பாடுகள் என்பது அதிகளவு நோக்கம் கொண்டதாகவும், ரியல் எஸ்டேட் மற்றும் வளாகங்கள் குறித்த கவனத்தை கொண்டதாகவும் அமைந்துள்ளன. இலங்கையில் நாம் கொண்டுள்ள செயற்பாடுகள் என்பது ஒன்றிணைந்த செயற்றிட்டங்களாகும், அவற்றை பிரித்தானியா மற்றும் இலங்கை ஆகியவற்றின் சிறந்த செயற்பாடுகளை நிலைபேறான உறவுகளினூடாக எமது பங்காளர்களுடன் கொண்டுவருவதாக அமைந்துள்ளது” என்றார்.
20 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
4 hours ago