2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பிளாஸ்டிக் எவ்விதத்திலும் பாதுகாப்பானதல்ல

Gavitha   / 2017 ஜனவரி 30 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆராய்ச்சி முடிவுகளின் பிரகாரம், மிகவும் பாதுகாப்பான பிளாஸ்டிக் பொருட்கள் எனப்படுபவை கூட உங்களது முழு உடலையும் கடுமையாகப் பாதிக்கும் ஆபத்தான இரசாயனப் பொருட்களைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  

நாம் எவற்றை உண்கின்றோம், எதனை அருந்துகின்றோம் என்பதில் நாம் மிகக் கவனமாக உள்ளோம். ஆனால் அவை எங்கு வைத்துப் பேணப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்த மறந்துபோகின்றோம். பொதியிடல் முறைமையானது, புற்றுநோய், நீரிழிவு, மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடுகள் மற்றும் அஸ்மா போன்று பல்வேறு சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.  

எமது உடலில் உள்ள பிளாஸ்டிக் இரசாயனங்கள் கணிசமான அளவில் உள்ளதை சோதனை மூலமாக நிரூபிக்க முடியும் என மிகச் சர்வதேச நிறுவனங்கள் கூறியுள்ளமை, பிளாஸ்திக் எந்த அளவிற்கு அபாயமான மட்டத்தை எட்டியுள்ளது என்பதைக் காண்பிக்கின்றது.  

இந்த நிலைமையானது எமது நாட்டிலும் அபாயமான கட்டத்தை எட்டியுள்ளது. எமது நாட்டில், சராசரி வெப்பநிலையானது 30-35 பாகை செல்சியஸ் ஆக இருக்கும் நிலையில், பிளாஸ்டிக்கிலிருந்து ஆபத்தான இரசாயனங்கள் வெளிவருவது நேரம் மற்றும் வெப்பநிலையில் தங்கியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளதைக் கருதுகையில், பிளாஸ்டிக் கொள்கலன்களில் உணவு, தண்ணீர் மற்றும் மருந்து வகைகளை மிக நீண்ட நேரம்  வைத்துப் பேணும் போது அவற்றில் இரசாயனத் தாக்கமும் அதிகமாகின்றது.  

டொக்டர் வருண குணதிலக, நச்சியல் திணக்களம் மற்றும் தேசிய நச்சு தகவல் மையத்தின் மேலாளர் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக் மற்றும் அவற்றின் சேர்க்கைகள் வெறுமனே எம்மைச் சூழ மட்டும் காணப்படவில்லை, மாறாக அது கிட்டத்தட்ட எங்கள் அனைவரினதும் உடல்களிலும் காணப்படுவதுடன், எமது இரத்தம் மற்றும் சிறுநீரில் அளவிடப்படக்கூடிய மட்டத்தில் காணப்படுகின்றன. நாம் உண்ணும் உணவு, நாம் அருந்தும் தண்ணீர் மற்றும் ஏனைய மூலங்கள் காரணமாக அவை உட்செல்கின்றன.  

அத்தகைய நச்சுப் பதார்த்தங்கள் மற்றும் இரசாயனங்களின் ஆபத்தான விளைவுகளுக்கான வாய்ப்பு ஒரு புறம் இருக்கையில், பாதுகாப்பான பொதியிடல் முறையாக காணப்படுகின்ற கண்ணாடியைத் தெரிவு செய்யுமாறு எமது உரிமையைக் கோருவதற்கான நேரம் வந்துவிட்டது. 

இந்த உலகில் பிளாஸ்டிக் பொருட்கள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. இந்த வெளிப்படையான ஆரோக்கியப் பிரச்சினைக்கு எதிராக நாம் விழித்தெழ வேண்டும். அத்தகைய பிளாஸ்டிக் போத்தல்கள் ஆபத்தான நச்சுப்பொருட்களை வெளிவிடுகின்றன என்பதற்கு அப்பால், bisphenol A (BPA)இன் ஊடுகடத்தல் மற்றும் Di-ethylhexyl Phthalate (DEHP) போன்ற சேர்க்கைப்பொருட்கள் பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்டுள்ளவற்றிற்கும் ஊடுகடத்தப்படுவதால், நீண்ட கால அடிப்படையில் மருத்துவரீதியான கெடுதல்களுக்கு வழிகோலுகின்றது.  

பிளாஸ்டிக் அல்லது PET கொள்கலன் நச்சு ஊடுருவலால் நடைமுறைரீதியாக அனைவருமே பாதிக்கப்படுவதுடன், சுவாச, இதய மற்றும் இரைப்பைக் கோளாறுகள் போன்ற பல்வேறுபட்ட வியாதிகளுக்கு ஆளாகின்றனர். இது கவனிப்பு பற்றாக்குறை கோளாறு, உட்சுரப்பு சீர்கேடு, நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றைத் தோற்றுவிக்கின்றது. உட்சுரப்பு கோளாறு, இள வயது சிறுமிகள் வயதுக்கு  முந்தியே பூப்படைவதற்கு காரணமாக அமைவதுடன், PCOS மற்றும் ஆண்மைச்சுரப்பி மார்பு புற்றுநோய் ஆகியவற்றிக்கான வாய்ப்பையும் அதிகரிக்கின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X