Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 30 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
டொயோட்டா லங்கா (பிரைவேட்) லிமிடெட், தனது கிளைகளை மேலும் விரிவாக்கும் முகமாக, புதிய கிளையை மாத்தறையில் அண்மையில் திறந்திருந்தது. இந்தத் திறப்பு வைபவமானது டொயோட்டா லங்காவின் நிர்வாக இயக்குநர் சுங்கோ யோஷியோகா தலைமையில் நடைபெற்றதுடன் இயக்குநர் / தலைமை செயல்பாட்டு அலுவலர் மனோகர அத்துக்கோரல, சகல மதத்தலைவர்கள், டொயோட்டா லங்காவின் முகாமைத்துவக் குழு, தெற்கு பிரதேசத்தில் வாழும் முக்கிய வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மத வழிபாடுகளைத் தொடர்ந்து நிர்வாக இயக்குநர் சுங்கோ யோஷியோகா உரையாற்றுகையில், “டொயோட்டா சேவைகள் மற்றும் டொயோட்டா நிலையங்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரிப்பதே டொயோட்டா லங்காவின் முகாமைத்துவத்தின் பங்காகக் காணப்படுகின்றது. எங்களுடைய கிளை வலையமைப்பை விரிவாக்கம் செய்வதிலும் வாடிக்கையாளர்களை அணுகுவதிலும் இந்தக் கிளை ஆரம்பமானது எங்களினது இன்னுமொரு மைல்கல்லாகக் காணப்படுகின்றது. ‘நீங்கள் அறுவடை செய்கின்ற விளைச்சலினால் அல்லாமல் நீங்கள் பயிரிடுகின்ற விதைகளின் எண்ணிக்கையினாலேயே ஒவ்வொரு நாளையும் நீங்கள் மதிப்பிடக்கடவீர்கள்’ எனும் ஞான வார்த்தைகளை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். ஆகவே கிளைகளை விரிவாக்கம் செய்வதில் சரியான பாதையில் டொயோட்டா லங்கா செல்கின்றது என உறுதியாக விசுவசிக்கின்றேன். இந்தப் பணியை நிறைவேற்றும் இப்பயணத்தில் டொயோட்டா லங்கா மாத்தறை கிளையானது ஒரு மிகப்பெரிய படியாகும்” என்று குறிப்பிட்டார்.
8 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago