Gavitha / 2021 ஜனவரி 25 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு சேவைகளை மேற்கொள்வதற்கு மேலும் இரண்டு விமான சேவைகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. அதனூடாக, நாட்டுக்கு சேவை வழங்கும் பதிவு செய்யப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆக அதிகரித்துள்ளது.
எதியோப்பியன் எயார்லைன்ஸ் மற்றும் மோல்தீவியன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுக்கு இவ்வாறு இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஆறு விமான சேவைகள் இலங்கைக்கு தமது சேவைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரியுள்ள நிலையில் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார அமைப்பிடமிருந்து இந்த இரு விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் குறைந்த செலவு விமான சேவையான GoAir, பங்களாதேஷ் சரக்கு விமான சேவையான Sky Capital Airlines, அவுஸ்திரேலிய குறைந்த செலவு விமான சேவையான Jetsar, பாகிஸ்தானின் சரக்கு விமான சேவையான Air Falcon மற்றும் குவைட் நாட்டின் Jazeera Airways விமான சேவை ஆகியவற்றின் அனுமதிகள் இதுவரையில் வழங்கப்படவில்லை.
2020 ஜனவரி மாதம் வரையில் இலங்கைக்கு மொத்தமாக 35 பதிவு செய்யப்பட்ட விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் காணப்பட்டதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் தேமியா அபேவிக்ரம தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, எட்டு சர்வதேச விமான சேவைகள் மற்றும் 15 தற்காலிக சேவைகள் இலங்கைக்கு இடம்பெற்றன. இதில் Emirates, Qatar Airways, Oman Air, Kuwait Airways, Singapore Airlines, மற்றும் Turkish Airlines போன்றவற்றுடன், புதிய தற்காலிக சேவைகளில் Ukraine International Airlines, SkyUp Airlines, மற்றும் கசகஸ்தானின் Air Astana போன்றன மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்கு சேவைகளை முன்னெடுத்திருந்தன.
9 minute ago
14 minute ago
25 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
25 minute ago
38 minute ago