Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா, இலங்கை வங்கியின் யாழ்ப்பாண மேற்தரக் கிளையில் அதன் முகாமையாளர் பிரேமராஜன் தலைமையில் நடைபெற்றது.
மதத் தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வின் போது, 80ஆவது ஆண்டு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகம், சிறப்பு விருந்தினராக இலங்கை வங்கியின் வடமாகாண செயற்பாட்டு முகாமையாளர் திருமதி பிரபாகரனும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வங்கியின் அதிகாரிகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது, வாகன சார்புகளின் செயற்பாடுகள் தொடர்பில், ஊழியர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் வேதநாயகம், “இலங்கை வங்கியானது மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றது. யுத்த காலத்தில் இந்த வங்கிகளின் சேவைகள் மகத்தானது. அத்தகைய சேவைகளைப் பாராட்ட வேண்டிய, அதேவேளையில் தொடர்ந்தும் சிறந்த வேவைகளை வழங்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago