Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு எதிரே திறந்த வெளி அரங்கில் மொபிடெலின் Cash Bonanza கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருவிழா சூழலை புதிய தளத்துக்குக் கொண்டு சென்று, இந்தியாவில் இருந்து பாடகர்களை அழைத்து வந்து பெரும் எண்ணிக்கையிலான மக்களையும் ஈர்த்தது. குறித்த தினத்தில் அனைத்து வீதிகளும் மொபிடெல் Cash Bonanza மக்களை அழைத்து வந்தது.
வருடம் முழுவதிலும், நாடெங்கிலும் உள்ள பெரும் மக்கள் தொகையை ஈர்க்கும் வாடிக்கையாளர் விருதுகள் வழங்கும் Cash Bonanza நிகழ்வின் ஒரு அங்கமாக இந்த திருவிழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
குடும்பங்களுக்கு உண்மையான கொண்டாட்டமாக இது அமைந்திருந்ததுடன், மொபிடெலின் ‘நாம் எப்போதும் அக்கறை செலுத்துவோம்’ என்ற நிறுவன வாசகத்திற்கு இசைவானதாக இருந்தது.
அனைத்து வயதுப் பிரிவையும் சேர்ந்தவர்களுக்கான நிகழ்வு என்ற வகையில், ஓவியப் போட்டி மற்றும் பங்கி ஜம்பிங் என்பவற்றையும், பெருமளவிலான இளைஞர்களை கவர்ந்த 4 ஜி விளையாட்டு வலயத்தையும் உள்ளடக்கியிருந்தது.
சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் பெருமளவிலான சிறுவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாலைப் பொழுதின் பிரதான அங்கமாக, இந்தியாவின் மிகச் சிறந்த பாடகர்களான சத்ய பிரகாஷ், ரீட்டா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
உள்ளூர் பாடகர்களான நவகம்புர கணேஷ், சமீரா ஹசன், ரகுனந்தன் மற்றும் ஸ்டான்லி ஆகியோருடன் இணைந்து மக்களை கவரும் வகையில் மிகச்சிறந்த இசை நிகழ்ச்சியை அவர்கள் வழங்கியிருந்தனர்.
சீதுவ சக்குரா மற்றும் சாரங்கா போன்ற இசைக்குழுக்களும் மக்களை பல மணித்தியாலங்கள் மகிழ்வாக வைத்திருந்தனர். மக்களின் வாழ்க்கையை நேர்நிலையாக தாக்கம் செலுத்தும் வகையில், தேசிய கைபேசி வழங்குனரான மொபிடெல்லானது, தமது வாடிக்கையாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றினை பிரபல கண் வைத்திய நிபுணர்களுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago