Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 30 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் உயர் தரம் வாய்ந்த சேவைகளை வழங்கியுள்ளதுடன், இலங்கையர்களுக்கு ஒப்பற்ற ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை அறிமுகம் செய்துள்ளது. சிறந்த, முறையான பயிற்சிகளைப் பெற்ற மற்றும் அதிகளவு ஊக்கத்துடன் காணப்படும் ஊழியர்களால் இந்தச் சிறப்பான சேவை நிலையை எய்தக்கூடியதாக இருந்தது.
இதன் பெறுபேறாக, நிறுவனத்தில் சிறப்பாகத் தமது திறமைகளை வெளிப்படுத்திச் செயலாற்றும் ஊழியர்களுக்கு, வருடாந்தம் வெளிநாட்டுச் சுற்றுப் பயண வாய்ப்புகளை நிறுவனம் வழங்குகிறது. இதனூடாக அவர்களுக்கு வாழ்நாள் அனுபவத்தைச் சேர்க்கிறது.
2017 இல் சிறப்பாகத் தமது திறமைகளை வெளிப்படுத்திச் செயலாற்றியிருந்த 78 ஊழியர்களுக்கு இவ்வாறு வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்பை இம்முறை நிறுவனம் வழங்கியிருந்தது. இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, அவர்களின் சாதனைகளின் அடிப்படையில் இந்தப் பயண ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஓரணி சீனாவுக்கும், மற்றைய அணி பாலி நகருக்கும் பயணமாகியிருந்தன. ஏப்ரல் மூன்றாம் திகதி இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் இடம்பெற்ற வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, இந்த அணிகள் தமது வெளிநாட்டு சுற்றுலாக்களை முன்னெடுத்திருந்தன. நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு கிடைத்திருந்த வாழ்நாள் வாய்ப்பாக இது அமைந்திருந்ததுடன், வெவ்வேறு கலாசாரங்கள் மற்றும் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பாகவும் அமைந்திருந்தன.
பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனம் என்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமை கொள்கிறது. நிறுவனத்தில் பரந்தளவு பயிலும் கலாசாரம் மற்றும் ஒன்றுதிரட்டிய நோக்கம் போன்றவற்றினூடாக நாட்டுக்கு பெருமளவான காப்புறுதித் தீர்வுகளை வழங்கி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
2 hours ago