Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மே 24 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, மக்களின் மனங்களை உணர்ந்து, எப்போதும் செயலாற்றுவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி முன்னிலையில் திகழ்வதுடன், தேவையான தருணங்களில் முன்வந்து உதவிகளை வழங்குவதில், எப்போதும் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது.
கொவிட்-19 தொற்றுப் பரவலின்தாக்கம், சமூகங்கள் மத்தியில் பெரும் சவால்களைத் தோற்றுவித்துள்ள நிலையில், தமது காப்புறுதித்தாரர்கள், ஊழியர்கள், முகவர் செயலணியினர், தாம்இயங்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நலனைக் காப்பதில், யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், 'உங்கள் வாழ்க்கைக்கு, எமது பலம்'எனும், தமது வர்த்தக நாம தொனிபொருளின் பிரகாரம் செயலாற்றி வருகின்றது.
சமூகத்துக்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்ச்சியாக உறுதி செய்யும் வகையில், ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல், மே மாதம் 11ஆம் திகதி வரை,கொழும்பைச் சேர்ந்த சமூகத்தார் மத்தியில் உலர் உணவுப் பொருள்கள் விநியோகத்தை இரண்டாம் கட்டமாகத் தொடர்ந்திருந்தது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து, இந்தத் திட்டத்தை, யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது. இரண்டு அமைப்புகளும் உறுதியானநிபுணத்துவ உறவைக் கட்டியெழுப்பி உள்ளதுடன், இந்தப் புரிந்துணர்வின் வெளிப்பாடாக, இந்தத் தொற்றுப் பரவிய காலப்பகுதியில், பெருமளவில் கவனத்தில்கொள்ளப்படாத சிறுவர், முதியோர் இல்லங்களைச் சென்று அவற்றுக்கு உதவிகளை வழங்கியிருந்தன. ஏனைய சமூகங்களைப் போலன்றி, இந்த நெருக்கடிநிறைந்த காலப்பகுதியில், இந்தச் சிறுவர், முதியோர் இல்லங்களைச் சேர்ந்தவர்கள், அதிகளவு தேவைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குவழமையாகக் கிடைக்கும் உதவிகளும் கிடைப்பது தடைப்பட்டிருக்கும்.
ஊவா, தென், வடமேல் மாகாணங்களிலுள்ள சிறுவர், முதியோர் இல்லங்களில், உலர் உணவுப் பொருள்கள் விநியோகிக்கும் நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், மேற்படி பிரதேசங்களின் சுமார் 650 பேர் அனுகூலம் பெற்றனர். உரியவர்களுக்கு, அத்தியாவசியப்பொருள்கள் சென்றடைவதில் இடையீட்டாளராகச் செயலாற்றிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago