Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2021 ஜூலை 01 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் வங்கியின் மொபைல் app தற்போது Lanka QR உடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் கொடுப்பனவுகளை QR குறியீட்டு முறையினூடாக இலகுவாக மேற்கொள்ளக்கூடிய வகையில் LankaClear இனால் வழங்கப்படும் பணமில்லாக் கொடுப்பனவுத் திட்டமாக Lanka Quick Response (QR) அமைந்துள்ளது.
யூனியன் வங்கியின் மொபைல் App இல் LankaQR ஐ ஒன்றிணைப்பதனூடாக, யூனியன் வங்கியின் சேமிப்பு அல்லது நடைமுறைக் கணக்கினூடாக எந்தவொரு அங்கீகாரம் பெற்ற விற்பனையாளருக்கும் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். தொற்றுப் பரவும் இக்காலப் பகுதியில் பெரிதும் அனுகூலமளிப்பதாக அமைந்திருப்பதுடன், பணத்துடன் தொடுகையை ஏற்படுத்துவது அல்லது பணக் கொடுக்கல் வாங்கல் ஈடுபடும் பகுதிகளில் அதிகளவு நேரத்தை செலவிடுவது போன்றவற்றினால் தொற்றுப் பரவலுக்கு வெளிப்படுத்தப்படுவதை வாடிக்கையாளர்கள் தவிர்த்துக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும்.
இந்த புதிய மேம்படுத்தல் தொடர்பில் யூனியன் வங்கியின் நுகர்வோர் வங்கியியல் பிரிவின் பிரதித் தலைவர் சாயா ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “மொபைல் App இல் LankaQR ஐ ஒன்றிணைத்துள்ள புதிய மேம்படுத்தலினூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு தமது கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி எந்தவொரு விற்பனை பங்காளர் பகுதிகளிலும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை உடனடியாக மேற்கொள்வதற்கான வசதியை வழங்கும். எமது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை பகுதிகளின் கட்டணம் செலுத்துமிடங்களில் பெருமளவில் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்வதற்கு இது பங்களிப்பு செய்யும் என்பதுடன், சுப்பர் மார்க்கெட்கள், விற்பனை நிலையங்கள், போக்குவரத்து சேவைகள் போன்ற பகுதிகள் அடங்கலாக பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்ய அவர்கள் இதனைப் பயன்படுத்த முடியும். அத்துடன், இது முற்றிலும் இலவசமானது. எமது வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை புரட்சிகரமானதாக மாற்றியமைக்கும் மற்றுமொரு படிமுறையாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மொபைல் வங்கியியல் app இல் வங்கி தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்ளும்.” என்றார்.
LankaQR ஐ பயன்படுத்தி கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் ‘UB Go’ மொபைல் வங்கியியல் app ஐ பதிவிறக்கம் (download) செய்து, தமது கணக்குக்கு பிரவேசித்து முறையான கட்டமைப்புகளை பின்பற்றி கொடுப்பனவுகளை நிறுவிக் கொள்ள வேண்டும். கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது, விற்பனையாளர் பகுதியில் Lanka QR குறியீடு காணப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொண்டு, QR குறியீட்டை ஸ்கான் செய்து கொடுப்பனவை மேற்கொள்ளலாம். விற்பனையாளருக்கு உடனடியாக கொடுப்பனவு அனுப்பி வைக்கப்படும் என்பதுடன், அதனை உறுதி செய்யும் SMS ஐ வாடிக்கையாளர் பெற்றுக் கொள்வார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 May 2025
17 May 2025