2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காளர்களுக்கு கௌரவிப்பு

Gavitha   / 2017 ஜனவரி 17 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ், தனது விசேடத்துவம் மற்றும் நம்பிக்கையை மேலும் ஒரு முறை உறுதி செய்யும் வகையில், 2016 பல விருதுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றிருந்தது. இவ்வாறான பல கௌரவிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு தமக்கு பக்க பலமாக அமைந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு தமது நன்றிகளை நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளதுடன், அந்த விருதுகளின் மூலமாகப் பெற்றுள்ள கீர்த்தி நாமத்தின் மூலமாக 2017இல் முன்னரை விட சிறந்தச் சேவைகளைப் பெற்றுக்கொடுக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. 

பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்கியலாளர்கள் - ACCA இனால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த அறிக்கையிடல் விருதுகள் வழங்கலின் போது, விருதொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் தனதாக்கியிருந்தது. இதன் போது நிதிச் சேவைகள் மற்றும் காப்புறுதி பிரிவில் முதல் நிலையைப் பெற்றுக்கொள்வதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு முடிந்தது. பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்கியலாளர்கள் கல்வியகத்தினால் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, 12ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதன் போது யூனியன் அஷ்யூரன்ஸ் 8 தடவைகள் விருதுகளை தனதாக்கியுள்ளது. 

இலங்கை பட்டய கணக்கியலாளர் கல்வியகம் - ICASLஇனால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் விருதுகள் வழங்கும் நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸின் வருடாந்த நிதி அறிக்கைக்கு இந்நாட்டின் காப்புறுதித்துறையின் சிறந்த வருடாந்த அறிக்கைக்கான விருது வழங்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X