Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 17 , பி.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் வங்கி, சர்வதேச ரீதியில் பெருமதிப்பைப் பெற்றுள்ளதும், முன்னணி இணைய அடிப்படையிலானத் தொழினுட்பத்தின் உதவியுடன் செயலாற்றும் அதி நவீன இலத்திரனியல் பணப்பரிமாற்றக் கட்டமைப்பான Instant Cash global money transfer சேவையுடன் பங்குடமையில் இணைந்துள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது. இந்தத் தொழினுட்பமானது, பாதுகாப்பானது என்பதுடன், பணம் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, ரெமிட்டன்ஸ் பெறுநர்கள் தமக்கானப் பணத்தினை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கின்றது.
சர்வதேசத்தில் வாழும் புலம்பெயர்ந்த சமூகத்தினது மற்றும் பயணிகளை இலக்குவைத்து மேம்படுத்தப்பட்டுள்ள இந்த Instant Cash global money transfer சேவையானது, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து செயலாற்றும், அர்ப்பணிப்புணர்வுமிகு வாடிக்கையாளர் சேவை மற்றும் நடவடிக்கைகள் குழுவினரால் கண்காணித்து பேணப்படுகின்றது.
Instant Cash பயனாளர்கள் நியாயமான கட்டணத்தில், துரித ரெமிட்டன்ஸ் சேவையினை, மிகச்சிறந்தப் பணப்பரிவர்த்தனைக் கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், ஏராளம் நாடுகளில் உள்ள பல்வேறு சேவை நிலையங்கள் மற்றும் முகவர்களின் தொடர்ச்சியான கவனிப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும். துரித ரெமிட்டன்ஸ்ற்கு மேலதிகமாக, Instant Cash ஆனது, cash-to-cash பரிவர்த்தனைகள், cash-to-வங்கிக் கணக்குக்கானப் பரிவர்த்தனைகள், வீட்டுக்கான விநியோகம், மொபைல் மணி ட்ரான்ஸ்பர் சேவை உள்ளிட்ட பல்வகைப் பணப்பரிவர்த்தனைத் தீர்வுகளை அளிக்கின்றது.
உலகளாவிய ரீதியில் 250,000இக்கும் மேற்பட்ட இடங்களில் முகவர் வலையமைப்பினைக் கொண்டுள்ள Instant Cashஆனது, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேண்டிய ரெமிட்டன்ஸ் சேவைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆற்றலைக் கொண்டுள்ளது. சர்வதேச ரீதியில் பரந்து வியாபித்துள்ள அதன் வலையைமைப்பானது, யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக முறையில், துரிதமாகவும், சௌகர்யமாகவும் பணப்பரிமாற்றத்தினை மேற்கொள்வதற்கு வழியமைத்துக்கொடுக்கின்றது.
இந்தப் பங்குடமை குறித்து கருத்துத் தெரிவித்த யூனியன் வங்கியின் சில்லறை வர்த்தக வங்கியியல் உப தலைவர் சாயா ஜயவர்த்தன, “Instant Cash உடன் நாம் ஏற்படுத்தியுள்ளப் பங்குடமை குறித்து மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இந்த வசதியானது, அதி நவீன ரெமிட்டன்ஸ் அனுபவத்தினை எமது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. உலகளாவிய ரீதியில் மிகப்பிரபலமான பணப் பரிவர்த்தனைச் சேவையான இந்த நியாயமான கட்டண ரெமிட்டன்ஸ் ஊடகத்தினை எமது வாடிக்கையாளர்கள் மற்றும் சர்வதேச ரீதியில் பரந்துவாழும் அவர்களின் உறவுகளுடன் இணைக்கும் வகையில் அளிப்பதில் பெருமிதமமைகின்றோம்.
இந்த ரெமிட்டஸ் சேவையானது, பெருமளவு அடிப்படையில் செயலாற்றும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த Instant Cash கட்டணங்கள், பணப்பரிவர்த்தனைத் தொழிற்றுறையில் மிகக்குறைந்த ரெமிட்டன்ஸ் கட்டணத்தைக் கொண்டுள்ளதுடன், அதி நவீன தொழினுட்பத்தின் உதவியுடன் மிகுந்த நம்பிக்கைக்குரிய சேவையாகவும் விளங்குகின்றது” என்றார்.
5 minute ago
11 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
40 minute ago
49 minute ago