2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ரஜமஹா விஹாரைக்கு ஒளியூட்டிய சுவதேஷி கொஹோம்ப

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை மூலிகைகள் அடங்கிய சுகாதார பாதுகாப்பு தயாரிப்புகளை தயாரிப்பதில் இலங்கையில் முன்னணியில் திகழும் சுவதேஷி நிறுவனத்தின் மூலம் தம்பதெனிய ரஜமஹா விஹாரையின் 'ஒளியூட்டல் பூஜை' நிகழ்வுக்கு தொடர்ச்சியான 14ஆவது வருடமாக அனுசரணை வழங்கியிருந்தது.

இலங்கையின் மூன்றாவது இராஜதானியாக தம்பதெனிய விளங்கியதுடன், மகா பராக்கிரமபாகு 2 அரசனின் காலப்பகுதியில் இந்த விஹாரை தாபிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. தலதா பெரஹெர புனித தந்தத்தை கௌரவிக்கும் வகையில் இடம்பெறுகிறது, இந்த தந்தம் 13 வருட காலம், இந்த விஹாரையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு குறித்து சுவதேஷி நிறுவனத்தின் தலைவரான அமரி குணவர்த்தன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை நிறுவனம் என்ற வகையில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதன் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்' என்றார்.

'எமது பாரம்பரியம் குறித்து எமது எதிர்கால சந்ததியினருக்கும் உணர்த்துவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அத்துடன் யாத்திரிகர்கள் அனைவரினதும் நலன் கருதி நாம் இந்த ஒளியூட்டலை மேற்கொண்டு வருகிறோம்' என மேலும் குறிப்பிட்டார்.
சுவதேஷி நிறுவனத்தின் வருடாந்த சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்துக்கு அமைவாக நாட்டில் இடம்பெறும் 4 காப்பு கடவுளுக்கான திருவிழாக்களின் ஒளியூட்டல் செயற்பாட்டை ஒவ்வொரு வருடமும் முன்னெடுத்து வருகிறது. களனி ரஜமஹா விஹாரை (விபீஷண தெய்வம்), றுகுணு கதிர்காம ஆலயம் (முருகன்), இரத்தினபுரி சமன் ஆலயம் (சமன் தெய்வம்) மற்றும் தெவுந்தர உத்பலாவரண ஸ்ரீ விஷ்ணு மஹா ஆலயம் (விஷ்ணு தெய்வம்) ஆகிய நான்கு தெய்வங்களுக்காக இடம்பெறும் திருவிழாக்களின் போது ஒளியூட்டலை சுவதேஷி மேற்கொண்டு வருகிறது.

1941ஆம் ஆண்டு கந்தானையில் தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. நூற்றுக்கு நூறு வீதம் உள்நாட்டு மூலப்பொருட்களை கொண்டு தனது தயாரிப்புகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சேஃப்பிளஸ், கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், பிளாக் ஈகள் பர்ஃவியும், லேடி மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் சிறுவர்களுக்கான 'லிட்டில் ப்ரின்சஸ்' ஷவர் ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் மூலமாக உயர்தர மூலிகை சவர்க்காரமான கொஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X