2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

லங்கெம் நிறுவனத்துடன் கைகோர்க்கும் மில்ரோய் ஒடோ என்ஜினியர்ஸ்

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி வாகன பழுதுபார்க்கும் பொறியியல் நிபுணர்களான மில்ரோய் ஒடோ என்ஜினியர்ஸ் நிறுவனமானது, ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் மிகப் பெரிய வர்ணப்பூச்சு மற்றும் மேற்பூச்சு உற்பத்தியாளராக திகழும் செர்வின்-வில்லியம்ஸ் நிறுவனத்துடன் பரந்த வகைகளிலான வாகனங்களுக்கான மீள்-வர்ணப்பூச்சுகளை  (Automotive Refinish) உள்நாட்டு சந்தைக்கு சந்தைப்படுத்தும் பொருட்டு, லங்கெம் பெயின்ட்ஸ் நிறுவனத்துடன் அண்மையில் ஒன்றிணைந்துள்ளது. 

களனி, கொஹால்வில வீதியில் அமைந்திருக்கும் மில்ரோய் என்ஜினியர்ஸ் நிறுவனமானது, BMW போன்ற மிக உயர்ரக வாகனங்களின் தொழில்நுட்பம்சார் தேவைப்பாடுகளை கையாள்வதில் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலான அனுபவத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்ற அதேவேளை, இக் குறிப்பிட்ட சந்தைப் பிரிவில் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனமாகவும் கருதப்படுகின்றது. 

செர்வின்-வில்லியம்ஸ் நிறுவனமானது விண்வெளி, கட்டிடக்கலை, இரசாயனம், கைத்தொழில் துறை மற்றும் கப்பல்களுக்கான உலகின் மிகப் பெரிய வர்ணப்பூச்சு உற்பத்தியாளராக திகழ்கின்றது. அத்துடன் உலகின் முதல்நிலை வாகன வர்ணப்பூச்சு கம்பனிகளுள் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ஐக்கிய அமெரிக்காவிலுள்ள முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக கருதப்படுகின்ற செர்வின்-வில்லியம்ஸ் 1866 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இந் நிறுவனம், தற்போது உலகெங்குமுள்ள 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தக ரீதியிலான பிரசன்னத்தையும், 8 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருடாந்த விற்பனைப் புரள்வையும் கொண்டியங்குகின்றது. 

இந்த உடன்படிக்கையின் கீழ், லங்கெம் பெயின்ட்ஸ் ஆனது மில்ரோய் ஒடோ என்ஜினியர்ஸ் நிறுவனத்திற்கு ஐ.எஸ்.ஓ. தராதரத்திற்கு அமைவான முழுமையான வர்ணக் கலப்பு தீர்வினை வழங்குகின்றது. இந்த வர்ணம் கலக்கும் இயந்திரமானது பாதுகாப்பிற்கான காற்றுச் சுற்றோட்ட வசதியுடைய மேசை மற்றும் ஒரு கலவை இறாக்கை, அளவுமானிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. தரம் தொடர்பாக மிகுந்த அக்கறையுள்ள வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தீர்வையும் உறுதிப்படுத்துவதற்காக, லங்கெம் பெயின்ட்ஸ் நிறுவனம் மிகவும் அனுபவம் பெற்ற மற்றும் சிறப்பாக பயிற்றப்பட்ட தொழில்நிபுணரை அங்கே கடமையில் ஈடுபடுத்தியிருக்கின்றது. வர்ண பொருத்தப்பாடு பார்ப்பது தொடர்பான சிக்கலான விடயங்களில் அவர் உதவிகளை வழங்குவார். 

லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் பொது முகாமையாளரான தமிந்த சிறிவர்தன தெரிவிக்கையில், 'இலங்கையில் செர்வின்-வில்லியம்ஸ் நிறுவனத்தின் வாகன மீள்-வர்ணப்பூச்சு வகைகளுக்கான ஏக முகவர் என்ற அடிப்படையில் சர்வதேச உயர்ரக வர்த்தக குறியீடான 'அல்ட்ரா 7000' இனை இலங்கையின் வாகனச் சந்தைக்கு கொண்டு வருவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். 'அல்ட்ரா 7000' வர்ணப்பூச்சு அனைத்து அமெரிக்க, ஜப்பானிய, ஐரோப்பிய வாகனங்களுக்கும் சில சீன வாகனங்களுக்கும் சிறந்ததென OEM சான்றழிக்கப்பட்ட ஒரு உற்பத்தியாகும். இது விரைவாக உலரக் கூடியதும் நீடித்து நிலைத்திருக்கக் கூடியதும் மட்டுமன்றி, மிகவும் அவசியமான செலவாகவும் காணப்படுகின்றது. அதேவேளை உலகெங்கும் தேவைப்படுகின்ற அனைத்து வர்ணங்களும் கிடைக்கின்றது' என்றார். 

பல்தரப்பட்ட வணிக துறைகளில் கவனம் செலுத்திவரும் கூட்டுநிறுவனமான லங்கம் சிலோன் பி.எல்.சி. இன் ஒரு அங்கமான லங்கம் பெயின்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனமானது, 'சிக்கென்ஸ்' மற்றும் 'லெசனல்' போன்ற வாகனப்பூச்சு வர்த்தக நாமங்கள் ஊடாக இலங்கைச் சந்தைக்கு நீண்டகாலம் சேவையாற்றி இருக்கின்றது. அதுமட்டுமன்றி அத்துறை சார்ந்த நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் வென்றிருக்கின்றது. 

'பிரத்தியேகமான வர்த்தக மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்ற நாம், வர்ணம் கலக்கும் இயந்திரங்களின் மூலம் இலங்கையிலுள்ள வாகன உடற்பாகம் திருத்தும் நிலையங்களை (Body Shops) தரம் மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். உயர்ந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்க பயிற்றப்பட்ட திறன்வாய்ந்த தொழில்நிபுணர்களை உருவாக்கும் பொருட்டு ஊழியர்களுக்கு முழு அளவிலான தொழில்நுட்ப பயிற்சியையும் வழங்குவோம். இதற்கு மேலதிகமாக, லங்கெம் நிறுவனம் அவர்களுக்கு உபகரண பராமரிப்பு தொடர்பான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதன் மூலம் வாடிக்கையாளர்கள் உயர்ந்தளவான திருப்தியை அடைவதை உறுதிப்படுத்தும் வகையிலமைந்த மிகவும் அவசியமான செலவு தொழிற்பாட்டுக்கு வழிவகை செய்யப்படுகின்றது' என்று பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார். 

மேற்பூச்சு வகைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளை உற்பத்தி செய்து தொழில்நிபுணத்துவர்கள், தொழில்துறையினர், வர்த்தக துறையினர் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதில் உலகளாவிய ரீதியில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக செர்வின்-வில்லியம்ஸ் திகழ்கின்றது. செர்வின்-வில்லியம்ஸ் நிறுவனத்தின் ஒரு உப பிரிவாக காணப்படும் செர்வின்-வில்லியம்ஸ் ஒடோமடிவ் ஃபினிஸஸ் ஆனது, வாகனம் மற்றும் வாகனத்தொகுதிக்கு வர்ணம்பூசும் தொழிற்றுறை நிறுவனங்களுக்காக முன்னேற்றகரமான தொழில்நுட்பத்திலமைந்த வர்ணப்பூச்சு மற்றும் மேற்பூச்சு பூசும் முறைமைகளை முழு அளவில் உற்பத்தி செய்து, விநியோகித்து வருகின்றது. 

உயர்ந்த செயலாற்றல் கொண்ட உட்புற மற்றும் வெளிப்புற வர்ணப்பூச்சுக்களையும் அதனுடன் இணைந்த உற்பத்திகளையும் வழங்கி வருகின்ற இந் நிறுவனமானது – வாகனங்களில் ஏற்பட்ட சேதங்களை திருத்தும் நிலையங்கள், விநியோகஸ்தர்கள், வாகனத்தொகுதி உரிமையாளர்கள் மற்றும் மீள்வர்ணம் பூசுவோர், உற்பத்தி நிலையங்கள், வாகன உடற்பாக உருவாக்குனர்கள் மற்றும் தரமான உபகரண உற்பத்தியாளர்கள் போன்ற பல்வகைப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தற்போது சேவையாற்றி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X