2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் அனுசரணையில்‘Heart Walk 2016’ நிகழ்வு

Gavitha   / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இருதய சம்மேளனத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘Heart Walk 2016’ நிகழ்வுக்கு லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பிரதான அனுசரணையை வழங்கியிருந்தது. உலக இருதய தினத்தை முன்னிட்டு இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பித்த இந்தப் நடை நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார்.  இந்த நடை நிகழ்வைத்தொடர்ந்து, இருதய குறைபாடுகளைத் தவிர்த்துக்கொள்வது தொடர்பான விளக்கங்கள் இடம்பெற்றதுடன், இதில் 1000க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

தனியார் சுகாதார பராமரிப்புத்துறையில் காணப்படும் வயது வந்தவர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் ஒரே இருதய பராமரிப்பு நிலையத்தை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கொண்டுள்ளது. இதுவரையில் 5500க்கும் அதிகமான சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X