S.Sekar / 2021 ஜூன் 06 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்தியாவசிய வங்கி மற்றும் நிதிச் சேவைகள் வழங்கலை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், பொலிஸ் மா அதிபரிடம் மேற்கொண்ட எழுத்து மூல கோரிக்கையின் பிரகாரம், பயணக் கட்டுப்பாடுகள் காணப்படும் வேளைகளில், நாடு முழுவதிலும் காணப்படும் வங்கி மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை இயக்குவது தொடர்பில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வழிகாட்டல் தொகுதியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் பிரகாரம், சகல வங்கிக் கிளைகள் மற்றும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தமது கிளைகளில் ஒரு தடவையில் 15 ஊழியர்களைக் கொண்டு இயங்க முடியும் என்பதுடன், அவ்வாறு அழைக்கும் ஊழியர்களின் விவரங்களை திரட்டி, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்துக்கு நிர்வாகம் வழங்க வேண்டும்.
அதன் பிரகாரம் இந்தப் பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு மாத்திரம் தொழில் நிலையங்களுக்கு பிரயாணங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்காக வங்கி, நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் திறந்திருக்காது என்பதுடன், பயணக் கட்டுப்பாடு நிலவும் காலப்பகுதியில் உள்ளக செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்த வழிகாட்டல் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026