2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வட பிராந்தியத்துக்கு நெற்களஞ்சிய வசதி

Gavitha   / 2017 ஜனவரி 31 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வட பிராந்தியத்துக்கு நெற் களஞ்சிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக தொழிற்றுறை மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. 

மன்னார் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்தக் களஞ்சியசாலையில் 10,000 மெட்ரிக்டொன்கள் வரை நெல்லை சேகரித்துக் கொள்ள முடியும் எனவும், இந்தக் களஞ்சியசாலையை நிர்மாணிப்பதற்கு 2.6 பில்லியன் ரூபாய் செலவாகியிருந்ததாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

“இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் பெருமளவு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். 30 வருட கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இப்பகுதி மக்களுக்கு தமது நெல் விளைச்சலை களஞ்சியப்படுத்தி வைத்திருந்து, உத்தரவாதமளிக்கப்பட்ட விலையில் அவற்றை விற்பனை செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறோம்” என தொழிற்றுறை மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். 

முன்னர் இலங்கை அரசாங்கத்தினால் நெல்லுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட விலை வழங்கப்பட்ட போதிலும், அதனை களஞ்சியப்படுத்துவதில் பிரச்சினைக் காணப்பட்டது. இதுபோன்ற 35 களஞ்சியசாலைகள் நாடு முழுவதிலும் நிர்மாணிக்கது் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இந்தப் பிராந்தியத்தில் காணப்படும் வசதிகளை மேம்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம், இது முதல் படியாக மாத்திரமே அமைந்துள்ளது. மேலும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X