Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 31 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார வளர்ச்சியின் ஊடாக வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை கலந்துரையாடுவதற்கு,அண்மையில் வருகை தந்திருந்த Millennium Challenge Corporation (MCC)இன் சிரேஷ்ட அதிகாரி இலங்கையின் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையின் தலைவர்களை சந்தித்தது கலந்துறையாடியுள்ளார்.
"MCC உடன்படிக்கைக்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டமையானது நாட்டில் நீதியான மற்றும் ஜனநாயக ஆட்சி, பொருளாதார சுதந்திரம் வலுப்படுத்தப்படல் மற்றும் மக்களில் முதலீடு செய்தலில் நாடு வெளிப்படுத்திய தேர்ச்சியின் சான்றாகும்" என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்தார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் செழுமையை அதிகரிக்க உதவுவதற்கு உள்ளக ரீதியில் வழிநடத்தப்படும் தீர்வுகளில் MCC செயற்பாடுகள் தங்கியுள்ளன. நல்லாட்சி, ஜனநாயக உரிமைகளை மதிப்பதில் ஊழலுக்கு எதிராக போராடல் என்பன உள்ளடங்கலாக கடும் தரங்களின் அடிப்படையில் நாடுகள் தெரிவு செய்யப்படுகின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, தொழிற்றுறை அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன ஆகியோரை சந்தித்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முன்னுரிமைகள் தொடர்பில் MCC அதிகாரிகள் கேட்டறிந்தனர். தனியார் முதலீடுகள் எவ்வாறு இலங்கையின் அபிவிருத்தி குறைந்த பகுதிகளில் தொழில்களை, வாழ்க்கைத் தொழில் பயிற்சிகளை மற்றும் கல்வி சந்தர்ப்பங்களை உருவாக்கியுள்ளன என்பதனை அறிந்து கொள்வதற்கு கிளிநொச்சியில் கார்கில்ஸ் மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் தொழிற்சாலைகளுக்கும் பிரதிநிதிகள் குழு விஜயம் செய்தது.
6 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago