2025 மே 21, புதன்கிழமை

வாழ்க்கையை மாற்றியமைக்கும் புத்தாக்கத்தை அறிமுகப்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ், வாடிக்கையாளர்களுக்கு வாழ்க்கையை மாற்றிக்கொள்ளக்கூடிய மற்றுமொரு புத்தாக்கமான டிஜிட்டல் அம்சமொன்றை வழங்க முன்வந்துள்ளது.  

யூனியன் அஷ்யூரன்ஸ் அண்மையில் தனது முதலாவது டிஜிட்டல் காப்புறுதிப்பத்திரத்தை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான சேவை மற்றும் வெளிப்படையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வழியேற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய டிஜிட்டல் காப்புறுதிப் புத்தகத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்குத் தமது ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய சகல தகவல்களையும் தமது விரல்நுனிகளிலேயே பெற்றுக் கொள்ள முடியும். ஆயுள் காப்புறுதி தொடர்பில் தமது தகவல்களை, வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்வதில் ஏற்படக்கூடிய காலதாமதங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.  

இந்தப் புதிய முறையின் பிரகாரம், வாடிக்கையாளர்களின் அலைபேசிக்குக் குறந்தகவல் ஒன்று அனுப்பப்படும். இதனூடாகத் தமது காப்புறுதிப்பத்திரத்தில் அடங்கியுள்ள விவரங்களை அவர்கள் பார்வையிட முடியும். 

இந்த டிஜிட்டல் காப்புறுதிப் புத்தகங்கள் QR குறியீடு செயற்படுத்தப்பட்டவை. ‘Insurance Simplified’ உள்ளம்சத்துடன், காப்புறுதிப் பத்திரத்தில் அடங்கியுள்ள விடயங்களை எளிமையான முறையில் வழங்குவதற்கு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

முன்னணி பதிவு முகாமைத்துவம் மற்றும் ஆவணங்கள் பதிவு செய்யும் நிறுவனங்களில் ஒன்றான DOK Solutions Lanka பிரைவட் லிமிட்டெட் உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்து, இந்தப் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.  

ஆயுள் காப்புறுதி பொது முகாமையாளர் இரோஷினி தித்தகல கருத்துத் தெரிவிக்கையில், “மற்றுமொரு பிரத்தியேகமான சேவையை அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளர்களுக்குப் பெறுமதி சேர்க்கும் வகையிலும், சௌகரியத்தைச் சேர்க்கும் வகையிலும் இது அமைந்துள்ளது. இந்தப் பிரத்தியேகமான சேவை அறிமுகத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்குத் தமது ஆயுள் காப்புறுதிப் பத்திரத்துடன் தொடர்புடைய சகல தகவல்களையும் தமது விரல் நுனிகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்தச் செயற்திட்டத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்குக் காப்புறுதிப் பத்திரத்துடன் தொடர்புடைய தகவல்களைப் பெற்றுக் கொடுப்பதில் ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆயுள் காப்புறுதி வழங்கக்கூடிய அனுகூலங்களைப் பற்றி, இலகுவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும், DOK Solutions Lanka உடன் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்த்து, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .