Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூலை 05 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபிடெல் தனது புதியதொரு முயற்சியாக Senehasa Education Resource Research Information Centre (SERRIC) உடன் கூட்டிணைந்து, அவர்களுக்கு இலவச இணைப்பை வழங்கியதன் மூலம், SERRIC இன் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகள், தங்கள் கற்றல் நடவடிக்கைகளை ZOOM, MS Teams போன்ற ஒன்லைன் தளங்களின் மூலம் தொடர்வதற்கு வழிவகுத்துள்ளது.
Senehasa Education Resource Research and Information Centre பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் செயற்படுகிறது. இங்கே மருத்துவம், கல்வி வசதிகள் வழங்கப்படுவதுடன் விசேட தேவைகள் உள்ள பிள்ளைகளின் பராமரிப்பாளர்கள், ஆசிரியர்களுக்கான வளங்களையும் தகவல்களையும் வழங்கும் மய்யமாகவும் செயற்படுகிறது.
இப்பிள்ளைகள், தொற்று நோய் பரவலின் காரணமாக, தங்கள் வீடுகளில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால், இயல்பு நிலை திரும்பும் வரை ஆசிரியர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
எனவே, அவர்கள் கற்றலில் பின்வாங்க மாட்டார்கள். இங்குள்ள பிள்ளைகள் அனைவரும், தேசத்துக்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் போர் வீரர்களின் பிள்ளைகள் ஆவர். இலவச இணைப்பை வழங்குவதன் மூலம், நாடு முழுவதும் இருக்கும் மாணவர்கள், ஒன்லைன் கற்றல் தளங்கள் மூலம், தங்கள் கல்வியைத் தொடர முடியும் என்பதை மொபிடெல் உறுதி செய்துள்ளது.
கொவிட் -19 தொற்றுப் பரவிய சவாலான காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் இணைப்பு, பெறுமதி சேர்க்கப்பட்ட பக்கேஜ்களை வழங்கியதோடு, நெருக்கடி நிலைக்கு உடனடியாகப் பதிலளிப்பதன் மூலம், மொபிடெலின் வாடிக்கையாளர் மய்யப்படுத்தப்பட்ட அணுகுமுறையும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 தொற்றுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தை ஆதரிப்பதற்காக, மொபிடெல் மேற்கொண்ட அர்த்தமுள்ள முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். அதேநேரம், இலங்கையை ஒரு தகவலறிந்ததும் அறிவுசார்ந்ததுமான சமுதாயத்தை நோக்கி அழைத்துச் சென்றிடும் முயற்சியுமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025