Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைந்துள்ள வில்லியம் அங்க்லீஸ் நிறுவனத்தில் விருந்தோம்பல் முகாமைத்துவ உயர் டிப்ளோமா பாடநெறியை கற்ற 10, 11, மற்றும் 12 ஆகிய மாணவர் குழுக்களுக்கான பட்டமளிப்பு விழா மாலபே SLIITஇல் அண்மையில் நடைபெற்றது.
120 டிப்ளோமாதாரிகள் இதன் போது சான்றிதழ்களை பெற்றதோடு விருந்தோம்பல் துறையில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு, Shangri la, சினமன் கார்ட்ன், சினமன் ரிசோர்ட், வெலிகம பே, மெரியட் ரிசோர்ட் அன்ட் ஸ்பா, நெஸ்லே லங்கா அனுசரணையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. வில்லியம் அங்க்லீஸ் இதுவரை பல்வேறு பாடநெறிகள் ஊடாக 500 பட்டதாரிகள் மற்றும் 1200 அவுஸ்திரேலிய சான்றிதழ் பெற்றவர்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிறுவனத் தலைவரின் வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் தங்கப் பதக்கத்தினை வில்லியம் அங்க்லீஸ் நிறுவனத்தின் தலைவர் தேசமான்ய எரல் வீரசிங்கவிடமிருந்து செல்வி லிஹினி தியாகி மரியா விமலசூரிய (10 ஆம் குழு) ஹிருணி யாப்பா அபேவர்தன (11 ஆம் குழு) மற்றும் தோன மந்திரி அனுந்தரா ஹெட்டிஆரச்சி (12 ஆம் குழு) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .