2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஸ்ரீ விஷ்ணு மஹா ஆலயத்துக்கு ஒளியூட்டல்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுர்வேத பிரத்தியேக பராமரிப்பு பொருட்களை தயாரிப்பதில் முன்னணியில் திகழும் சுவதேஷி மூலமாக தொடர்ச்சியான ஏழாவது ஆண்டாக தெவுந்தர உதபலாவரண ஸ்ரீ விஷ்ணு மஹா கோயிலுக்கு ஒளியூட்டலை மேற்கொள்ள முன்வந்திருந்தது. இந்நிகழ்வுக்கு 'சுவதேஷி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய' என பெயரிடப்பட்டிருந்ததுடன், ஜுலை 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையிலான எசல திருநாள் காலப்பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த அனுசரணை குறித்து சுவதேஷி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி அமரி விஜேவர்த்தன கருத்து வெளியிடுகையில், 'இலங்கை நிறுவனம் எனும் வகையில், இலங்கையின் கலாசார விழுமியங்களை பேணி காப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இந்த ஒளியூட்டல் மூலமாக எமது பாரம்பரிய கலாசார விழுமியங்கள் அழிவடையாமல் எதிர்கால சந்ததியினருக்கும் சென்றடையக்கூடிய நடவடிக்கையாக மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் பல பக்தர்கள் நன்மையடைந்து வருகின்றனர்' என்றார்.

இந்த ஒளியூட்டலுக்கு பின்னர் வர்ணமயமான எமது கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் களியாட்ட நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அசல் உத்பலாவரண ஸ்ரீ விஷ்ணு ஆலயம் போர்த்துக்கேயரால் சேதமாக்கப்பட்ட பின்னர் தபுலுசென் எனும் அரசனால் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டது. பௌத்த இலக்கியத்துக்கு அமைவாக, புத்தபிரான் மரணிக்கும் முன்னர் இலங்கையில் பௌத்த மதத்தை பாதுகாக்கும் பொறுப்பை 'சக்ரா' எனும் தெய்வத்தை முன்னெடுக்கும் படி குறிப்பிட்டிருந்தார். சக்ரா தெய்வம் இந்த செயற்பாட்டை 'உத்பலாவரண' தெய்வத்திடம் ஒப்படைத்திருந்தது. உத்பலாவரண என்பதன் அர்த்தம் 'வர்ணம் நீலம்' என்பதாகும். இது விஷ்ணு தெய்வத்தின் வர்ணமாகும். இதனால் தெவுந்தர ஆலயமானது உத்பலாவரண ஸ்ரீ விஷ்ணு தேவா மந்திரய எனப் பெயர் பெற்றது.

2013 இல், புத்த பெருமானின் புனித தந்தம் பேணப்பட்டு வரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தம்பதெனிய ரஜமஹா விஹாரையின் 'ஸ்ரீ தலதா மாளிகை' 2013 இல், சுவதேஷி நிறுவனத்தின் தலைமை அதிகாரியான திருமதி. அமரி விஜேவர்தன மூலமாக புனரமைப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1927ஆம் ஆண்டு களனி விஹாரையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்திருந்த ஹெலெனா விஜேவர்தன லமாதெனி அவர்களின் பூட்டப்பிள்ளை திருமதி. அமரி விஜேவர்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.சுவதேஷி நிறுவனத்தின் வருடாந்த சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்துக்கு அமைவாக நாட்டில் இடம்பெறும் 4 காப்பு கடவுள்களுக்கான திருவிழாக்களின் ஒளியூட்டல் செயற்பாட்டை ஒவ்வொரு வருடமும் முன்னெடுத்து வருகிறது. 

அத்துடன் இலங்கையை பாதுகாத்திடும் நாற்திசை தெய்வங்களான களனி (விபூஷண கடவுள்), கதிர்காமம் (கதிர்காமக் கந்தன்), இரத்தினபுரி(புத்தர்), தெவிநுவர(விஷ்ணு கடவுள்) ஆகிய ஆலயங்களையும் திருவிழாக்காலங்களில் ஒளியூட்டும் நடவடிக்கையை சுவதேஷி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

1941ஆம் ஆண்டு கந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், அப்சரா வெனிவெல், பேர்ள்வயிட், லக்பார் ஆடை சவர்க்காரம், பிளாக் ஈகள் பர்ஃபியும் மற்றும் ஆஃவ்ட்டர் ஷேவ், சுவதேஷி ஷவர் ஜெல் மற்றும் சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள லிட்டில் ப்ரின்சஸ் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. முன்னணி ஆயுர்வேத சோப் வகையான கோஹோம்ப ஹேர்பல் சோப் வகையை இந்நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகிப்பதுடன், பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் வகையையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X