Lenin Raj / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹெய்லீஸ் ஃபென்டன்ஸ் லிமிடெட் (Hayleys Fentons Limited) நிறுவனத்தின் ஒரு அங்கமான ஹெய்லீஸ் மொபிலிட்டி லிமிடெட், தனது புதிய காய்இ (Kaiyi) முதன்மை விற்பனை நிலையத்தை (Flagship Store) கொழும்பு 10, ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது.
புதிய தலைமுறை போக்குவரத்து தீர்வுகளைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு, வாகனங்களை நேரில் பார்வையிடவும், சோதனை ஓட்டங்களை (Test Drives) மேற்கொள்ளவும் இந்த நிலையம் ஒரு சிறந்த இடமாக அமையும்.
இந்தத் திறப்பு விழாவின் முக்கிய அம்சமாக Kaiyi eVibe E04 எனும் முழுமையான மின்சார ஹேட்ச்பேக் (Hatchback) கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் சிறப்பம்சங்களாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ வரை பயணிப்பதற்கு சான்றளிக்கப்படுகின்றது.
30 நிமிடங்களுக்குள் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி. 360-பாகை கெமெரா அமைப்பு, பிரீமியம் ஆடியோ மற்றும் ஆப்பிள் கார்பிளே (Apple CarPlay) / ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) இணைப்பு வசதிகள் காணப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், விரைவில் Kaiyi X3 Pro EV எனும் புதிய மின்சார வாகனத்தையும் அறிமுகப்படுத்த ஹெய்லீஸ் மொபிலிட்டி திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் மேலதிக விபரங்களுக்கு இல 75, ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கோ அல்லது 0112 222 222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ள முடியும்.
அத்துடன் www.hayleysmobility.com இணையதளம் வாயிலாகவும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
இலங்கையின் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், மின்சார மற்றும் (Hybrid) வாகனத் தீர்வுகளை ஹெய்லீஸ் மொபிலிட்டி வழங்கி வருகின்றது.
1 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
9 hours ago