2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஹெல்த் லிங்க் அன்பளிப்பு வவுச்சர்கள் அறிமுகம்

Gavitha   / 2017 பெப்ரவரி 01 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்குவோரின் நலன் கருதி அர்த்தமுள்ள மற்றும் பெறுமதி வாய்ந்த அன்பளிப்பாக, ‘ஹெல்த் லிங்க்’ வவுச்சர்களை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் அறிமுகம் செய்துள்ளது.  

நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கு உதவும் வகையில், சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இந்த ஹெல்த் லிங்க அன்பளிப்பு வவுச்சர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 30 வெவ்வேறு வகையான பக்கேஜ்களை இவை கொண்டுள்ளன. 

ரூ.2000.00, ரூ. 5000.00 மற்றும் ரூ.10,000 ஆகிய விலைகளில் ஹெல்த் லிங்க் வவுச்சர்களை தற்போது கொள்வனவு செய்து கொள்ள முடியும். லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் ஹெல்த் லிங்க திணைக்களத்திலிருந்தும், வெளிநோயாளர் பார்மசி, கீல்ஸ் சுப்பர், கே-சோன் கட்டுபெத்த மற்றும் ஜா-எல கே-சோன் ஆகியவற்றில் அமைந்துள்ள லங்கா ஹொஸ்பிட்டல் பார்மசிகளிலிருந்தும் கொள்வனவு செய்ய முடியும். 

ஹெல்த் லிங்க் பொறுப்பு மருத்துவ அதிகாரியான வைத்தியர். சமிந்தி ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், ‘புதிய நோய் இனங்காணல் முறைகளின் மூலமாக ஆரம்ப நிலையில் நோய்களை இனங்கண்டு கொள்ள முடிகின்றமையால், மக்களுக்கு தமது வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்வதற்கு உதவியாக அமைந்துள்ளது. அதன் விளைவாக நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழக்கூடியதாக அமைந்துள்ளது. லங்கா ஹெல்த் லிங்க் மூலமாக வெவ்வேறு சுகாதார பரிசோதனைகள் வழங்கப்படுவதுடன், அதனூடாக நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது’ என்றார். 

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் ஹெல்த் லிங்க் இனால், ஆரம்ப கட்ட நோய் இனங்காணல்களை மேற்கொள்வது மட்டுமின்றி, ஆரம்ப நிலை இடையீடுகள், ஆண், பெண், குடும்பங்கள், வயது முதிர்ந்தவர்கள், தனிநபர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் மத்தியில் பாரதூரமாக ஏற்படக்கூடிய நோய் நிலைகளை ஆரம்பத்தில் இனங்காணல் வசதிகளும் வழங்கப்படுகின்றன.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X