2025 ஜூலை 30, புதன்கிழமை

அதிக விருதகளை தனதாக்கியது TVS நிறுவனம்

Gavitha   / 2016 நவம்பர் 23 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIM Brand Excellence விருதுகள் வழங்கும் நிகழ்வில் புதிய சாதனையை நிகழ்த்திய வண்ணம், ஒரு வர்த்தக நாமம் பெற்றுக்கொண்ட அதியுயர் விருதுகளை TVS நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது. இந்த விருதுகள் வழங்க ஆரம்பிக்கப்பட்டு 15 வருட காலப்பகுதியில், ஆறு விருதுகளை வேறு எந்தவொரு நிறுவனத்துக்கும் இதுவரையில் பெற முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

TVS நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “SLIM Brand Excellence” விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவது, அனுபவம் வாய்ந்த மற்றும் சுயாதீனமான நடுவர்கள் குழாமினாலாகும். இதன் போது, ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்படுவதுடன், ஏனைய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பில் கௌரவிப்பைப் பெற்றுக்கொண்டிருந்தமையானது நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாட்டையும், விசேட வாடிக்கையாளர் சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. நாட்டின் வியாபார துறையில் உயர்ந்த விருதுகள் வழங்கும் நிகழ்வாக கருதப்படும் SLIM Brand Excellence வர்த்தக நாம விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்த ஆண்டின் சிறந்த வர்த்தக நாமத்துக்கான கௌரவிப்பைப் பெற்றுகொண்டமை எமக்கு பெரும் கௌரவமாக அமைந்துள்ளது” என்றார்.  

அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,  “நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ள இந்த விருதுகள் உண்மையில், நிறுவனத்தினுள் செயற்படுத்தப்படும் 4Di (Discovering, Disrupting, Diluting and De-categorizing) செயற்பாடுகளின் விளைவாக அமைந்துள்ளது” என்றார்.  நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரதம முகாமையாளர் ஹஷான் ஹபுதந்திரி கருத்துத்தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களின் தேவைகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம், அந்த தேவைகளுக்கு பொருத்தமானத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதன் காரணமாக, மாபெரும் பிரபல்யத்தை TVS நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு SLIM Brand Excellence விருதுகள் வழங்கும் நிகழ்வில் உயர்ந்த நிலையை எய்துவதற்கு பங்களிப்பு வழங்கிய, சகல வாடிக்கையாளர்களுக்கும் நாம் எமது மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

இதுவரையில், TVS நிறுவனத்தின் நாடு முழுவதும் பரந்து காணப்படும் வலையமைப்பில் விற்பனைப் பிரதிநிதிகள், சேவை பிரதிநிதிகள் மற்றும் உதிரிப்பாக பிரதிநிதிகள் ஆகியோர் இதில் உள்ளடங்கியுள்ளதுடன், மொத்தமாக 1,400 பிரதிநிதிகள் வரையில் காணப்படுகின்றனர். வர்த்தக நாமத்தின் சிறப்பை நோக்கி, வுஏளு நிறுவனம் “2015ம் ஆண்டின் உற்பத்தி வர்த்தக நாமம்” எனும் விருதையும் தனதாக்கியிருந்தது. அதுபோலவே, குறித்த ஆண்டுக்கான ”ஆண்டின் சிறந்த புதுமுறைகாண்கின்ற வர்த்தக நாமம்” மற்றும் ”ஆண்டின் மீள்வருகை வர்த்தக நாமம்” போன்ற விருதுகளையும் பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .