2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிகர இலாபம் ரூபா 362 மில்லியன்

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி (AAI) நிறுவனமானது, 2013 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் வரிக்கு பின்னரான இலாபமாக ரூபா 362 மில்லியனை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் அடையப்பட்ட இலாபமான 73 மில்லியன் ரூபாவைவிடக் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

சொஃட்லொஜிக் குழுமத்தின் நிதி சேவை துறையின் ஓர் அங்கமான ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம், இலங்கை பொருளாதாரத்தின் நேர்மறை அடிப்படைகள் மற்றும் காப்புறுதி துறை குறித்து தொடர்ச்சியான வணிக மூலோபாயங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டின் செயற்திறனானது, வணிக திட்டம் மற்றும் நிறுவனத்தின் நிலையான வளர்ச்சி மீதான உறுதியான நிலைப்பாட்டினை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இந் நிறுவனத்தின் 2013 ஆம் ஆண்டு மொத்த எழுதப்பட்ட வெகுமதி தளம் ரூபா 4.07 பில்லியன் வளர்ச்சி அடைந்துள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 26% வளர்ச்சியை எட்டியுள்ளது. மேலும் ஆயுள் காப்புறுதி வெகுமதி தளம் ரூபா 2.5 மில்லியனை பெற்று 24% ஆல் அதிகரித்துள்ளது மற்றும் பொதுகாப்புறுதி வெகுமதி தளம் ரூபா 1.5 பில்லியனை பெற்று 31% ஆல் அதிகரித்திருந்தது. இந்த வளர்ச்சி விகிதங்கள் அனைத்தும் 2013 இன் 3வது காலாண்டில் ஆயுள் வளர்ச்சி 9.5% ஆகவும், முழு ஆண்டிற்குமான பொதுக்காப்புறுதி 9.1% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

கடந்த 2013ஆம் ஆண்டு முடிவுகளின் படி, நிகர ஈட்டிய கட்டுப்பணம் ரூபா 3.24 பில்லியனை பெற்று 35% வளர்ச்சியையும், மொத்த தேறிய வருவாய் ரூபா 4.23 பில்லியனை பதிவு செய்து 48% அதிகரிப்பையும் பெற்றிருந்தது. அதேவேளை மொத்த சொத்து ரூபா 7.47 பில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வருடத்தில் பெற்றுக்கொண்ட ரூபா 5.89 பில்லியனை விடவும் இது 28% அதிகரிப்பாக உள்ளது. நிறுவனத்தின் உரிமைப்பங்கு மற்றும் கையிருப்பானது ரூபா 1.83 பில்லியனாக பதிவு செய்யப்பட்டதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 25% ஆல் வளர்ச்சியை அடைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் காப்புறுதிதாரர் நிதி ரூபா 4.85 பில்லியனாக பதிவு செய்திருந்ததுடன், அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 30% வளர்ச்சியாகும்.

நிதிசார் முடிவுகள் குறித்து ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் அஷோக் பத்திரகே கருத்து தெரிவிக்கையில், 'எமது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் வணிகத்தை மேம்படுத்தவும், வளங்களை ஒன்றிணைக்கும் செயற்பாட்டையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம். எனவே, கடந்த 2013 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் செயற்திறன் குறித்து பெரிதும் மகிழ்ச்சியடைவதுடன், எமது திட்டங்களை பூர்த்தி செய்து முன்னோக்கி செல்வதற்கான பெறுமதியை அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் நாம் எதிர்பார்க்கின்றோம்' என தெரிவித்தார்.

சொஃட்லொஜிக் கெப்பிடல் பிஎல்சியினால் நடத்தப்படும் ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனம் சொஃட்லொஜிக் குழுமத்தின் அங்கமாக உள்ளது. அத்துடன் சுகாதாரம், சில்லறை, ICT, ஓய்வு, மோட்டார் வாகனங்கள் மற்றும் நிதி சேவைகள் குறித்து கவனம் செலுத்தும் இலங்கையில் மிக வேகமாக வளர்ந்துவரும் பெருநிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. AAA தரப்படுத்தலை பெற்றுள்ள அபிவிருத்தி நிதிசார் நிறுவனங்களான நெதர்லாந்தை சேர்ந்த FMO மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த DEG, இந் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குதாரர்கள் ஆவர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .