2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அம்பா இன்வெஸ்ட்மன்ட் சேர்விசஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ள Moody

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

Moody’s கோப்பரேஷன் நிறுவனம் அம்பா இன்வெஸ்ட்மன்ட் சேர்விசஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. சர்வதேச நிதிசார் நிறுவனங்களுக்கு அளவு சார் பகுப்பாய்வுகளையும் முதலீடுகள் சார்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அம்பா இன்வெஸ்ட்மன்ட் சேர்விசஸ் நிறுவனம், இலங்கையில் 2003ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
 
அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஆய்வுக்கான சிரேஷ்ட பணிப்பாளர்களான டொயிஷ் வங்கி, கோல்ட்மன் சாக்ஸ் மற்றும் ஜே பி மோர்கன் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளின் மூலம் நிறுவப்பட்டிருந்தது. 
 
தற்போது அம்பா இன்வெஸ்ட்மன்ட் சேர்விசஸ் நிறுவனத்தில் 900க்கும் அதிகமான ஊழியர்கள் பெங்களுர், கொழும்பு, சான் ஜோஸ், லண்டன், நியுயோர்க் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
Moody’s கோப்பரேஷன் நிறுவனத்தின் Copal அங்கத்தின் மூலம் இந்த அம்பா நிறுவனம் நிர்வாகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .