2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தேசிய லொத்தர் சபையின் வருமானம் 2013இல் 16 வீதத்தால் அதிகரிக்கும்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய லொத்தர் சபையின் வருமானம் நடப்பு ஆண்டில் 16 வீதத்தால் அதிகரித்து 14.7 பில்லியன் ரூபாவாக பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 
 
2009ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியினுள் லொத்தர் சபையின் வருமானம் இருமடங்காக அதிகரித்திருந்ததாகவும், 2009ஆம் ஆண்டு இந்த பெறுமதி 6.2 பில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும், 2012இல் இப்பெறுமதி 12.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்ததாகவும் தேசிய லொத்தர் சபையின் தலைவர் சமிந்த அதுலுவாகே தெரிவித்திருந்தார்.
 
1963ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய லொத்தர் சபை, தனது 50ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வாடிக்கையளர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசுகளை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .