2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வெற்றிக் கதையுடன் 2013ஆம் ஆண்டை நிறைவு செய்யும் கொமர்ஷல் கிரெடிட்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு முக்கிய விருதுககளை பெற்றுக் கொண்ட வெற்றிக் கதையுடன் 2013ஆம் ஆண்டை நிறைவு செய்கின்றது. லண்டனில் இடம்பெற்ற 'பூகோள வங்கியியல் மற்றும் நிதி மீள்நோக்கு விருதுகள் 2013' (Global Banking and Financial Review Awards 2013) நிகழ்வில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் 'இலங்கையில் மிக வேகமாக வளர்ச்சியடையும் நிதிக் கம்பனி 2013' மற்றும் 'இலங்கையில் மிகவும் புத்தாக்கமான நிதிக் கம்பனி 2013' ஆகிய இரு பெருமைக்குரிய விருதுகளை வெற்றி கொண்டுள்ளது. 
 
2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'பூகோள வங்கியியல் மற்றும் நிதி மீள்நோக்கு விருதுகள்' ஆனது உலகளாவிய நிதியியல் சமூகத்திற்குள் இடம்பெறுகின்ற புத்தாக்கம், சாதனை, உபாயம், முன்னேற்றம் மற்றும் உணர்வுத் தூண்டுதல்மிக்க மாற்றங்கள் போன்றவற்றை பிரதிவிம்பம் செய்து காண்பிக்கின்றது. நிதியியல் உலகத்திலுள்ள குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் மற்றும் சிறப்புத்துவம் என்பவற்றில் முதன்மை வகிக்கின்ற அனைத்து அளவிலான கம்பனிகளுக்கும் அங்கீகாரமளிக்கும் நோக்கிலேயே இவ்விருது வழங்கல் திட்டம் உருவாக்கப்பட்டது. 
 
இந்த விருது வழங்கலானது மேலும் பல விடயங்களையும் உள்ளடக்கும் விதத்தில் முன்னேற்றமும் வளர்ச்சியும் கண்டுள்ளது. இதன்படி வங்கியியல் (Banking), வெளிநாட்டு நாணயமாற்று (Foreign Exchange), காப்புறுதி (Insurance), காப்பு நிதியங்கள் (Hedge Funds), ஓய்வூதிய நிதியங்கள் (Pension Funds), இணக்கப்பாடு மற்றும் ஆலோசனை (Compliance & Advisory), கூட்டாண்மை ஆளுகை (Corporate Governance), தரகு மற்றும் பரிவர்த்தனை சேவை (Brokerage & Exchanges), செயற்றிட்ட நிதி (Project Finance), இரட்டை (இரும) தெரிவுகள் (Binary Options), முதலீட்டு முகாமைத்துவம் (Investment Management), தொழில்நுட்பம் (Technology), சொத்து மற்றும் செல்வம் முகாமை (Asset & Wealth Management), இஸ்லாமிய நிதியியல் (Islamic Finance), பரிவர்த்தனைக்கு உட்படுத்தப்பட்ட நிதியம் (Exchange Traded Funds), ரியல் எஸ்டேட் (Real Estate), கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) மற்றும் ஏனைய துறைகள் இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. 
 
மும்பாய் நகரில் அமைந்துள்ள தாஜ் லேண்ட்ஸ் என்ட் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற மிகவும் பிரகாசமிக்க 'உலக வர்த்தக குறியீட்டு சிறப்புத்துவ விருதுகள்' நிகழ்வில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் சர்வதேச அளவிலான பாராட்டுதலை தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் வெற்றி கொண்டது. வங்கியியல், நிதியியல் சேவைகள் மற்றும் காப்புறுதித் பிரிவில் தனது துறைசார் தொழிற்பாடுகளில் சிறப்புத் தன்மையை வெளிப்படுத்தியமைக்காக இதன்போது கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் பாராட்டி கௌரவிக்;கப்பட்டது. 
 
உலகின் மிகவும் வெற்றிகரமானதும் எதிர்பார்க்கப்பட்டிருந்ததுமான வர்த்தகக் குறியீடுகளிற்கு பக்கபலமாக இருந்து உழைத்த உலகின் மிகச் சிறந்த மூளைசாலிகள் சிலர் ஒன்றுகூடும் ஒரேயொரு மிகப் பெரிய ஒன்றுகூடல் களமாக 'உலக வர்த்தக குறியீட்டு காங்கிரஸ் நிகழ்வு திகழ்கின்றது. ஒவ்வொரு துறையிலும் கண்டங்களிலும் இருந்து வருகை தருகின்ற தலைவர்கள் வருடாந்தம் ஒன்றுகூடும் இடமாக இந்த காங்கிரஸ் கூட்டத்தொடர் அமைகின்றது. உலகம் முழுவதிலும் உள்ள 100 நாடுகளை தழுவிய அங்கத்துவத்தை கொண்டுள்ள 'உலக வர்த்தக குறியீட்டு காங்கிரஸ்' ஆனது, ஆசியா மற்றும் உலகம் முழுவதிலும் காணப்படுகின்ற எல்லா தொழிற்றுறைகளினதும் சந்தைப்படுத்தல் தராதரங்கள் மற்றும் வர்த்தக குறியீட்டு முகாமைத்துவம் ஆகியவற்றை தரமேம்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுகின்றது. 
 
உள்நாட்டைப் பொறுத்தமட்டில், இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட 'தேசிய வர்த்தக சிறப்புத்துவ விருதுகள்' நிகழ்வின்போது வங்கியல்லா நிதி நிறுவனங்கள் பிரிவு மற்றும் மிகச் சிறந்த கூட்டாண்மை சமூகப் பொறுப்பு பிரிவு போன்ற பிரிவுகளின் கீழ் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனமானது இரண்டாம்-நிலை (Runner-Up) விருதுகளை தமதாக்கிக் கொண்டது. 
 
கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரொஷான் எகொடகே, 'நிறுவனம் தனது செயற்பாட்டில் வெளிப்படுத்திய சிறப்புத்தன்மைக்காகவும் அதேபோன்று வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்துடன் தொடர்புபட்ட ஏனைய பங்குதாரர்களுக்கும் மிகச் சிறந்தவற்றை வழங்குவதை மையமாகக் கொண்டு கம்பனி தொடர்ச்சியாக செயற்பட்டமைக்காகவும் கிடைக்கப் பெற்ற அங்கீகாரமாக இது அமைகின்றது' என்று; கூறினார்;. அவர் மேலும் கூறுகையில், 'இந்த விருதுகளின் ஊடாக நாம் பெருமிதம்; அடைந்திருக்கின்றோம். எமது நிறுவனத்தின் ஒட்டுமொத்த அணியினர் மற்றும் நாடு முழுதிலும் உள்ள எமது பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் சார்பில் நாம் அவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்கின்றோம். எமது பயணம் என்பது முற்றுமுழுதாக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகவும் கடமையுணர்ச்சியுடன் ஒத்திசைந்து முன்கொண்டு செல்லப்படுவதாகவும் காணப்படுகின்றது. இலங்கை முழுவதும் நாம் எமது சேவை வலையமைப்பின் அடைவு மட்டத்தை விஸ்தரித்து வரும் அதேநேரம் எமக்கே சொந்தமான வர்த்தகக் குறியீட்டுடனான சேவை மற்றும் கூட்டாண்மை துறைசார் தலைமைத்துவம் ஆகியவற்றையும் வழங்கி வருகின்ற நிலையில், மேற்படி வெற்றியை மேலும் விருத்தி செய்வதற்கான ஊக்கத்தை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்' என்று குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .