2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செலான் டிக்கிரி 21 வருட நிறைவை கொண்டாடுகின்றது

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மிக விருப்பத்திற்குரிய சிறுவர் சேமிப்புக் கணக்கான 'செலான் டிக்கிரி' ஆனது புதுப் பொலிவுடனும் 'அனுகூலங்களின் உலகம்' (World of Benefits)  எனும் வெகுமதித் திட்டத்தின் ஊடாகவும் தனது 21ஆவது ஆண்டு நிறைவை இவ்வருடம் கொண்டாடியது.

1992 ஆண்டு ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட செலான் 'டிக்கிரி' கணக்கானது, ஒரு பரிசு வழங்கல் திட்டத்தை அறிமுகப்படுத்திய இலங்கையின்; முதலாவது சிறுவர் சேமிப்புக் கணக்காக திகழ்வதன் மூலம் சாதனைஒன்றை நிலைநாட்டியுள்ளது.

இலங்கையின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சிறுவர்களை செலான் 'டிக்கிரி' கணக்கு விரைவாக தம்வசப்படுத்துவதற்கும் அதேபோல், வீடுகள் தோறும் பிரபலமான வர்த்தக நாமமாக வேகமாக வளர்ச்சி காண்பதற்கும் தொடர்ச்சியான சேமிப்புகளே முக்கிய காரணியாக அமைந்தது.

கடந்த 21 வருடங்களாக செலான் 'டிக்கிரி' சிறுவர் கணக்கு தனக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் பல அடைவுகளையும் புத்தாக்கமான விற்பனை ஊக்குவிப்புத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது.

'டிக்கிரின்ஜா' என்ற திட்டத்தின் ஊடாக அதிர்ஷ்டம் ஒன்றை கொண்டு வரத்தக்க முன்னெடுப்பை அறிமுகப்பத்திய வங்கியாக செலான் வங்கியே திகழ்கின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் ஹொங்கொங்கில் உள்ள 'டிஸ்னிலேண்ட்', சிங்கப்பூரின் 'சென்ரோசா' மற்றும் பேங்கொக்கில் உள்ள 'ட்ரீம் வேர்ல்ட' ஆகிய இடங்களுக்கு சென்று திரும்புவதற்கான சுற்றுப் பயண வாய்ப்புக்கள் வெகுமதியாக வழங்கப்பட்டன.

இவற்றிற்கு மேலதிகமாக – டிக்கிரி லேண்ட் விளையாட்டுத் திடல், டிக்கிரி ரஷ்ய நடனமாடும் சிறுவர்கள், துவிச்சக்கரவண்டி ஊக்குவிப்பு மற்றும் டிக்கிரி ரசிகர் கழகம் போன்ற களிப்பூட்டல் வசதிகளையும் இந்த திட்டம் உள்ளடக்கியிருந்தது. விகாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற 'செலான் டிக்கிரி கார்னிவல்' களியாட்ட நிகழ்வானது நாட்காட்டியில் முக்கிய அவதானத்தைப் பெற்ற ஒன்றாக அமைந்துள்ளது.

அதுமட்டுமன்றி, வேடிக்கைகளும் கேளிக்கைகளும் நிறைந்திருந்த இந்த முழுநாள் நிகழ்வில் 5000 இற்கும் அதிகமான கணக்கு வைப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் வேடிக்கைகள் மற்றும் வெகுமதிகளுடன் இடம்பெறுகின்ற செலான் வங்கியின் 'சிறுவர் வங்கியியல் தினம்' என்பது, சேமிப்புப் பழக்கத்தை மேலும் முன்கொண்டு செல்ல வழிவகுக்கும் வெற்றிகரமான மற்றுமொரு உபாயப் பொறிமுறையாகும்.

சிறுவர்களுக்கு வெகுமதி அளிக்கும்; மற்றும் சிறந்த சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வங்கியியல் சேவையின் 21ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக செலான் டிக்கிரி சேமிப்புக் கணக்கானது 'அனுகூலங்களின் உலகத்தை' வெகுமதியாக வழங்கும் வகையில் மேலும் பிரமாண்டமானதாக, சிறந்ததாக அதேநேரம் ஒளிமயமானதாக பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கணக்கில் ரூபா 500/=ஸ்ரீ மீதியாக வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ஒரு குவளை அல்லது தண்ணீர் போத்தலை பெற்றுக்கொள்ள உரித்துடையவராவர். அதேபோன்று வைப்பு மீதியாக ரூபா 5,000/= இனை பேணும் வாடிக்கையாளர்கள் பாடசாலைப் புத்தக பைகள் அல்லது சிறுவர்களுக்கான கைக் கடிகாரங்களை வெகுமதியாக பெற தகுதியுடையவராவர். அவ்வாறே ரூபா 10,000/=  இனை வைப்பு மீதியாக கொண்டுள்ள கணக்கு வைப்பாளர்கள் வீடியோ விளையாட்டு உபகரணத்தையும், கணக்கில் ரூபா 30,000/=  மீதியைக் கொண்டுள்ளவர்கள் MP4 Player கருவியையும் பெறுவதற்கு தகுதியுடையவர்களாவர். இதேவேளை, வைப்புக்களை மேற்கொள்வதன் மூலம் கணக்கு மீதியானது அதிகரித்துச் செல்வதற்கேற்ப அந்த கணக்கிற்குரிய சிறுவர்கள் விஷேட பரிசுகளையும் பெற்றுக் கொள்வர்.

ரூபா 50,000/= மீதித் தொகைக்கு தொலைவியக்க கட்டுப்பாட்டு கருவியுடனான ஹெலிகொப்டர் அல்லது நீங்கள் 8 வயதிற்கு குறைந்தவராக இருப்பின் சிறிய துவிச்சக்கரவண்டி ஒன்று வெகுமதியாக கிடைக்கும். ரூபா 75,000/=  இற்கு  24-Key

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .