2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜனசக்தி நிறுவனத்திற்கு ISO 9001:2008 மீள் சான்றிதழ்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி அதன் தரமான காப்புறுதி தலைமையை தொடருகிறது. இத் துறையில் தரத்தை விருத்தி செய்யும் இலக்கினைக் கொண்டதும், ISO தரத்தை பெறும் இலங்கையின் முதல் காப்புறுதி வழங்குனராக ஜனசக்தி நிறுவனம் திகழ்கிறது. அண்மையில் இலங்கை வெரிடாஸ் பணியகத்தினால் (Bureau Veritas Lanka) நடாத்தப்பட்ட மீள்சான்றிதழ் கணக்காய்வுகளை (Recertification Audit) தொடர்ந்து ஜனசக்தி நிறுவனத்திற்கு ISO 9001:2008 மீள் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தரமான காப்புறுதிக்கு அவசியமான கடுமையான மேலாண்மை கட்டமைப்பை நடைமுறைபடுத்தும் நிறுவனங்களே ISO தரத்தை பெறுவதற்கான தகுதியை பெறும்.
 
ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் கருத்து தெரிவிக்கையில், 'சரியான நேரத்தில் தேவைகளை பூர்த்தி செய்யும் வணிக நிறுவனத்துடன் வியாபாரத்தை மேற்கொள்கிறோம் என்பதை வாடிக்கையாளர் உறுதிப்படுத்தல் வேண்டும். ISO 9001:2008 மீள் சான்றிதழை பெறுவதற்கு அவசியமான இக் கடுமையான செயல்முறையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததன் மூலம் எமது உயர்தர சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் உயர்மட்ட திருப்தி போன்றவற்றை வழங்க எமது நிறுவனம் உறுதிகொண்டுள்ளது என்பது நிரூபனமாகிறது' என தெரிவித்தார்.
 
சிறந்த ISO 9001:2008 ஆவணமாக்கலானது தரகையேடு மற்றும் தரமான நடைமுறைகளை பயன்படுத்துவோருக்கு இலகுவில் கையாளக்கூடிய ஓர் ஆவணமாக ஒன்றிணைக்கிறது. மேலும் செயல்முறைகள் மற்றும் செயற்பாட்டு செயல்முறைகளின் தொடர்ச்சியான அபிவிருத்திகள் ஊடாக செயற்பாட்டுச் செலவுகள் குறைக்கப்படுகிறது. அலுவலக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் ஊடாக பங்குதாரர்களுக்கு இடையேயான தொடர்பு அதிகரிக்கிறது. மேலும் அது சட்டபூர்வமான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட தேவைகள் எவ்வாறு நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்வதன் மூலம் சட்டரீதியான இணக்கத்தை உறுதிப்படுத்துகிறது. இதற்கு மேலதிகமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் சிறந்த நிலைத்தன்மை மற்றும் கண்டறிதல் ஊடாக இடர் மேலாண்மை அபிவிருத்தி செய்யப்படுகிறது. இறுதியாக அங்கீகரிக்கப்பட்ட தர நிலைகளுக்கு எதிரான சுயாதீன சரிபார்ப்புகள் மூலம் வணிக சான்றுகள் நிரூபிக்கப்படுகிறது.
 
இந்த மீள் சான்றிதழ் குறித்து ஜனசக்தி நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை முகாமைத்துவம் மற்றும் ஆராய்ச்சி பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் நிலுபுல் சந்திரசேன கருத்து தெரிவிக்கையில், 'எமக்குரிய தரநிலைகளின் கணக்காய்வு செயல்முறைகள் (Audit Process) எம்மை ஐளுழு தர நிர்வாக செயல்முறை மற்றும் மீள் சான்றிதழை பெறுவதற்குரிய சிறப்பான தன்மை மற்றும் நம்பகத்தன்மை நோக்கி வழிநடத்தியது. ISO 9001:2008 தரம் குறித்த கவனம் செலுத்தும் மேலாண்மை செயல்முறையானது நம்மை வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அறிவு, திறமை, கருவிகள், தொழில்நுட்ப திறன்களை வழங்குகிறது' என்றார். 
 
மேலும் அவர், 'எமது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை விட தரமான சேவைகளையே நாம் தொடர்ச்சியாக வழங்குகிறோம். இருப்பினும் இச் செயல்முறையானது எமது இலக்கினை அடைவதற்கான அளவுகோளாக கருதுகிறோம்' என்றார்.
 
ஜனசக்தி நிறுவனமானது ISO சான்றிதழை பெற்ற பின்னர் தொடர்ச்சியாக சேவைகளின் தரத்தை மேம்படுத்தி வருவதுடன், தற்போது பிராந்திய அலுவலகம், தலைமை அலுவலகம் மற்றும் விற்பனை அலுவலகம் உள்ளடங்கலாக ISO பரப்பை விரிவுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஜனசக்தி நிறுவனத்தின் அடித்தளத்தின் அடிப்படை தூண்களாக திடமான நிதி தளம், விவேகமான எழுத்துறுதி, ஒலி மறுகாப்பீட்டு ஆதரவு மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த திறமையான ஊழியர்கள் ஆகியோர் காணப்படுகின்றனர்.
 
இலங்கை வெரிடாஸ் பணியகமானது (Bureau Veritas Lanka) ஜனசக்தி நிறுவனத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ISO சான்றிதழுக்காக ஈடுபட்டு வருகிறது. அத்துடன் நிறுவனத்தின் பணியாளர்கள் மத்தியில் தர மேலாண்மை அறிவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் உள்ளக கணக்காய்வு பயிற்சிகள் மற்றும் முன்னணி கணக்காய்வு பயிற்சிகள் உள்ளடங்கலான பல பயிற்சி திட்டங்களை முன்னெடுப்பதற்கான உதவிகளையும் வழங்கி வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .