2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ரூபா 119 மில்லியன் பங்கிலாபத்தை வழங்குவதாக கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் அறிவிப்பு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 21 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது, 2013/2014 நிதியாண்டுக்காக இடைக்கால பங்கிலாபமாக பங்கொன்றிற்கு ரூபா 0.50 இனை கொடுப்பனவு செய்வது தொடர்பில் அறிவித்துள்ளது. இதன்படி, மொத்தமாக ரூபா 109 மில்லியனை இடைக்கால பங்கிலாபமாக வழங்கவுள்ளது. 2013 ஒக்டோபர் 10ஆம் திகதி இதனை கொடுப்பனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தலா 10.9 பங்குகளை வைத்திருப்போருக்கு - ஒரு பங்கு என்ற அடிப்படையில் 2013 மார்ச் மாதத்தில் கம்பனி நடைமுறைப்படுத்திய ஒதுக்குகளை மூலதனமயமாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாகவே இவ் இடைக்கால பங்கிலாப வழங்கல் மேற்கொள்ளப்படுகின்றது.
 
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவு செய்யப்பட்ட முன்னணி நிதிக் கம்பனிகளுள் ஒன்றாக கொமர்ஷல் கிரெடிட் நிறுவனம் திகழ்வதுடன், 30 வருடங்களுக்கும் அதிகமான காலம் பரந்தளவான சேவையாற்றியுள்ளது. 2013 ஜூன் 30 திகதியன்று முடிவடைந்த காலாண்டுக்காக கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் அதனது மொத்த சொத்துத்தளத்தின் பெறுமதி கிட்டத்தட்ட ரூபா 20 பில்லியனாக காணப்பட்டது. 
 
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 60 இற்கும் மேற்பட்ட இடங்களில் பரந்துபட்டதாக அமைக்கப்பட்டுள்ள சேவை வலையமைப்பை கொமர்ஷல் கிரெடிட் கொண்டியங்குகின்றது. வாடிக்கையாளர் சேவையில் வெளிப்படுத்திய சிறப்புத்துவத்திற்காக புகழ்பெற்றுள்ள கொமர்ஷல் கிரெடிட் நிறுவனமானது, 'SLIM வர்த்தக குறியீட்டு சிறப்புத்துவ விருதுகள் 2012' (SLIM Brand Excellence 2012) நிகழ்வில் 'ஆண்டின் மிகச் சிறந்த சேவை வர்த்தகக் குறியீடாக' நடுவர் குழுவினால் தெரிவுசெய்யப்பட்டு தங்க விருதினை பெற்றுக் கொண்டது. இதுதவிர, மேலும் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளையும் நிறுவனம் வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .