2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கைக்கு 200 மில்லியன் அமெ.டொலர்களை கடனாக வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இரண்டாம் நிலை பாடசாலை திட்டத்தை அபிவிருத்தி செய்யும் வகையில் இலங்கை அரசுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கான உடன்படிக்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கி கைச்சாத்திட்டிருந்தது.

இலங்கையில் பிரதான தேவையாக அமைந்துள்ள தொழில்வாய்ப்புகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான ஆளுமைகள் நிறைந்த எதிர்கால சந்ததியை உருவாக்கும் வகையிலேயே இந்த கடன் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் நிதித் தொகையின் மூலம் பாடசாலை மட்டத்தில் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தவும், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கும் வகையிலும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .